Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க டீம்ல 3 பேருக்கு காயம்.. எப்படியாவது ஜெயிக்கணும்.. டாஸில் தோற்ற இலங்கை கேப்டன் பரிதாபம்

லக்னோ : நெதர்லாந்து - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி டாஸ் வென்றது.

டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். நெதர்லாந்து அணி எந்த மாற்றமும் இன்றி இந்தப் போட்டியில் ஆடும் என அறிவித்தார்.

அடுத்து பேசிய இலங்கை அணி கேப்டன் குசால் மென்டிஸ் தங்கள் அணியின் பரிதாப நிலையை பற்றி கூறினார். தங்கள் அணியின் மூன்று வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், இந்தப் போட்டியில் இரண்டு வீரர்களை மாற்றி இருப்பதாகவும் கூறினார்.

இலங்கை அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி மூன்றிலும் தோல்வி அடைந்துள்ளது, இந்த நிலையில், இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா காயம் காரணமாக நீக்கப்பட்டு, குசால் மென்டிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

ICC ODI World Cup 2023 NED vs SL : Netherland won the toss

இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே இலங்கை அணி தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. மறுபுறம் நெதர்லாந்து அணி மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று இருக்கிறது. அதுவும் வலுவான தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அசத்தி இருக்கிறது. எனவே, இந்தப் போட்டியில் இலங்கை அணி வெல்வது கடினம் என்றே கருதப்படுகிறது.

இலங்கை - பிளேயிங் லெவன் : பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மென்டிஸ் (கேப்டன் - விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, துஷான் ஹேமந்தா, சமிக்கா கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா

நெதர்லாந்து - பிளேயிங் லெவன் : விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோட், கோலின் ஆக்கர்மேன், பஸ் டி லீடே, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (விக்கெட் கீப்பர் - கேப்டன்), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்

Story first published: Saturday, October 21, 2023, 10:43 [IST]
Other articles published on Oct 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+