Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா ஆகணும்.. பெரும் ஏமாற்றத்தில் சுப்மன் கில்.. தவறான நேரத்தில் அணியை விட்டு விலகிய சோகம்

டெல்லி : சுப்மன் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக இந்திய அணியின் உலகக்கோப்பை போட்டிகளில் இடம் பெறவில்லை.

இந்திய அணிக்கு இதனால் இழப்பு என முதலில் கூறி வந்தவர்கள் கூட இப்போது அப்படி எதுவும் கூறவில்லை.

ICC ODI World cup 2023 news : Shubman Gill feel disappointed missing Indias matches

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. 2 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற பெரும் சரிவில் இருந்தும் மீண்டு இந்தியா வென்றது.

அதனால், சுப்மன் கில் அணியில் இல்லாதது பெரிய இழப்பாக தெரியவில்லை என்பதே உண்மை. சில வீரர்கள் அணியில் இல்லை என்றால் அது அணிக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். உதாரணத்துக்கு விராட் கோலி, கே எல் ராகுல், பும்ரா, பாண்டியா போன்ற வீரர்கள் அணியில் இல்லை என்றால் அது அணியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால், சுப்மன் கில் இல்லாத நிலையில் இஷான் கிஷன் அணியில் துவக்க வீரராக ஆடினார். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டும் ஆனார். ஆனால், அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதனால், சுப்மன் கில் இல்லாததை இந்திய அணி கடந்த போய்விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு அதிக ரன் குவித்த இந்திய வீரர் சுப்மன் கில் தான். அவர் இல்லை என்றால் பல மாற்று வீரர்கள் துவக்கம் அளிக்க காத்திருப்பதே அவரது இழப்பு பெரிதாக தெரியாமல் போக முக்கிய காரணம்.

இதே காரணத்தை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டு பேசி இருக்கிறார். சுப்மன் கில் தவறான நேரத்தில் அணியை விட்டு விலகி இருக்கிறார். இதன் காரணமாக சுப்மன் கில் மிகவும் ஏமாற்றத்தில் இருப்பார். அவரால் அணிக்கு எந்த இழப்பும் இல்லை. அவர் ஆட்டத்தை பார்க்க ரசிகர்களுக்கு குஷியாக இருக்கும். அதனால், சுப்மன் கில் இந்திய அணியில் ஆடாதது ரசிகர்களுக்கு மட்டுமே இழப்பு எனக் கூறி இருக்கிறார்.

தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருக்கும் சுப்மன் கில் அணிக்கு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. தவறான நேரத்தில் வந்த காய்ச்சலால் அவர் அணியில் முக்கியத்துவத்தை இழந்து இருக்கிறார்.

Story first published: Wednesday, October 11, 2023, 9:35 [IST]
Other articles published on Oct 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+