மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அரை இறுதிச் சற்றுக்கு செல்லாமல் ஐந்தாவது இடத்தைப் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாமை பதவியை விட்டு நீக்க வேண்டும் என அந்த நாட்டில் கடும் கோபங்கள் எழுந்துள்ளது. பல்வேறு முன்னாள் வீரர்களும் பாபர் அசாமை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வு குழு உறுப்பினர் மற்றும் பந்துவீச்சாளர் என அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதற்கு காரணம் பாபர் அசாம், பதவியை விட்டு நீக்க வேண்டும் என தலைமை தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த இன்சாமம் உல் ஹக் முடிவு எடுத்ததாகவும் ஆனால் அது நடக்காது என தெரிந்தவுடன் தமது பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த தேர்வு குழு உறுப்பினரையும் இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார். இதை பார்க்கும் போது 2012 ஆம் ஆண்டு தோனி என்ன செய்தாரோ அதே ரூட்டை தான் பாபர் அசாம் தற்போது பாலோ செய்கிறார்.
என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
2012 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்வியை தழுவிய நிலையில் தோனியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அப்போதைய தேர்வு குழு உறுப்பினர்கள் முடிவு எடுத்தார்கள். ஆனால் தோனி அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் உடன் நெருங்கிய நட்பில் இருந்தார். இதன் காரணமாக தம்மை தூக்க நினைத்தவர்களை சீனிவாசனை வைத்து தோனி நீக்கிவிட்டார். இதே பாணியை தான் தற்போது பாபர் அசாம் கையில் எடுத்திருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் உடன் நட்பில் இருக்கும் பாபர் அசாம், தம்மை தூக்க நினைக்கும் அனைவரையும் பதவியை விட்டு விலக வைத்து விட்டார். இதனால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் தற்போது நீக்கப்பட மாட்டார் என்று தெரிகிறது. தோனி தானாகவே சென்றது போல் பாபர் அசாமும் தானாக செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவரைக்கும் பாபர் ஆட்சி தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடக்கும்.