Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை செமி பைனல் - பாகிஸ்தானுக்கு மழை வைத்த ஆப்பு.. நியூசிலாந்தை ஜெயித்தாலும் வேஸ்ட்

பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி வாய்ப்புக்காக போராடி வரும் பாகிஸ்தான் அணி, முக்கிய போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய போதும் அரை இறுதிக்கு செல்வது மிகவும் கடினமாகி உள்ளது.

அதற்கு காரணம் மழையால் இந்த போட்டி முழுமையாக நடைபெறவில்லை என்பது தான். டிஎல்எஸ் முறைப்படி வெற்றி அறிவிக்கப்பட்டதால் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இது குறைந்த வித்தியாசம் என்பதால் அந்த அணியின் நெட் ரன் ரேட் பெரிய அளவில் உயரவில்லை. தற்போது புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணிக்கும் கீழே தான் இருக்கிறது பாகிஸ்தான்.

தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 14 புள்ளிகள் பெற்றும், தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகள் பெற்றும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அரை இறுதிக்கும் தகுதி பெற்று விட்டன. இந்த நிலையில் அடுத்த இரண்டு அரை இறுதி இடங்களுக்கு மட்டுமே போட்டி உள்ளது.

ICC ODI World Cup 2023 : Pakistan semi final chance still hard after defeating New Zealand

அதிலும் ஆஸ்திரேலியா அணி 7 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் +0.924 ஆக உள்ளது. பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி 8 போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று நான்காம் இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இரண்டுமே 8 புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் தான் வித்தியாசம் உள்ளது. நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட் +0.398. பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் +0.036. இந்த வித்தியாசம் தான் பாகிஸ்தான் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. மழை வராமல் போட்டி முழுதாக நடந்து இருந்தால், பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடிய நிலையில், நியூசிலாந்து நிர்ணயித்த 402 ரன்கள் இலக்கை சில ஓவர்கள் முன்னதாகவே எட்டி இருந்தால் பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் இன்னும் கூட உயர்ந்து இருக்கலாம்.

நியூசிலாந்து அணி அடுத்து இலங்கை அணிக்கு எதிராக ஆட உள்ளது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். அதே போல, பாகிஸ்தான் அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத வேண்டும். அந்தப் போட்டியில் வென்றால் 10 புள்ளிகள் பெறும். ஆனால், நியூசிலாந்து அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். அப்போது தான் அந்த அணியை விட முன்னே செல்ல முடியும்.

ஆனால், இன்னொரு சிக்கலும் உள்ளது. அது ஆப்கானிஸ்தான் அணி. அந்த அணி 7 போட்டிகளில் ஆடி நான்கு வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு ஒரு போட்டி மட்டுமே லீக் சுற்றில் மீதமுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. அது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என்ற இரண்டு பலமான அணிகளுக்கு எதிரான போட்டி என்பது மட்டுமே ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கும் சவால்.

அதில் ஒரு அணியை வீழ்த்தினாலும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிக்கு சவால் விடுக்கும் ஆப்கானிஸ்தான். அதே சமயம், அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.330 என மிக மோசமாக உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் வென்றால் நியூசிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே அரை இறுதி செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதி போக வாய்ப்பே இல்லை. அந்த அணிகளுக்கான வாய்ப்பு அனைத்தும் முடிந்து விட்டது.

Story first published: Saturday, November 4, 2023, 20:34 [IST]
Other articles published on Nov 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+