Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் - இந்தியாவை காப்பற்றிய ஆஸ்திரேலியா.. உச்சகட்ட சந்தோசத்தில் பாகிஸ்தான்

தரம்சாலா : 2023 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியதால் புள்ளிப் பட்டியலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன லீக் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா அணி ஆறு லீக் போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.

ICC ODI World Cup 2023 Points table : Australia saved India and Pakistan beating New Zealand

நியூசிலாந்து அணி தான் முன்பு இருந்த மூன்றாவது இடத்தில் அதே 8 புள்ளிகளுடன் அப்படியே தொடர்கிறது. ஆனால், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தால் இந்தியாவை முந்தி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கும்.

அப்படி நடந்தால் இந்திய அணி மீதமுள்ள நான்கு போட்டிகளில் ஒன்று, இரண்டு தோல்விகளை சந்தித்தால் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தை அடையும். அப்போது ஆஸ்திரேலியா லீக் சுற்றின் முடிவில் எப்படியும் புள்ளிப் பட்டியலில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் தான் இருக்கும். அப்படியானால் அரை இறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணியை சந்திக்க நேரிடும். அது சிக்கலான ஒன்று.

முதல் நான்கு இடங்களில் இந்தியாவுக்கு போட்டியாக இருக்கும் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளில் தற்போது ஆபத்தான அணியாக இருப்பது ஆஸ்திரேலியா தான். அந்த அணி தொடரின் துவக்கத்தில் இரண்டு தோல்விகளை அடைந்து அதில் இருந்து மீண்டு தற்போது புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை எட்டி இருக்கிறது. தோல்விகள் கொடுத்த வலியால் பெரும் வேகத்துடன் ஆடி வருகிறது.

எனவே, இந்தியா புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தால் நான்காவது இடத்தில் இருக்கும் அணியுடன் அரை இறுதியில் மோதும் வாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலியாவுடன் ஆடுவதை தவிர்க்கலாம். தற்போது உள்ள சூழ்நிலையில் நான்காவது இடத்தை நியூசிலாந்து அல்லது வேறு அணிகள் பிடிக்கும். அது இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பை எளிதாக்கும். நியூசிலாந்து ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியின் தோல்வி பாகிஸ்தான் அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. காரணம், தற்போது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளும் 8 புள்ளிகளுடன் உள்ளன. பாகிஸ்தான் தற்போது 4 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி இனி மீதமுள்ள மூன்று போட்டிகளில் வென்றால் 10 புள்ளிகளை பெறும் என்பதால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நியூசிலாந்து அணி 10 புள்ளிகளை எட்டாமல் 8 புள்ளிகளுடன் இருப்பது பாகிஸ்தான் அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

2023 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் நிலவரம் - தென்னாப்பிரிக்கா 10 புள்ளிகள், இந்தியா 10 புள்ளிகள், நியூசிலாந்து 8 புள்ளிகள், ஆஸ்திரேலியா 8 புள்ளிகள், இலங்கை 4 புள்ளிகள், பாகிஸ்தான் 4 புள்ளிகள், ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகள், நெதர்லாந்து 4புள்ளிகள், வங்கதேசம் 2 புள்ளிகள், இங்கிலாந்து 2 புள்ளிகள்

Story first published: Saturday, October 28, 2023, 19:55 [IST]
Other articles published on Oct 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+