Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 9 ஓவர்.. கேமை மாற்றிய நெதர்லாந்து.. ஸ்காட் எட்வர்ட்ஸிடம் ஏமாந்து போன தென்னாப்பிரிக்கா

தரம்சாலா : 2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி சவாலான இலக்கை தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தப் போட்டி மழை காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 34 ஓவர்களில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்களை இழந்து வெறும் 141 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

ICC ODI World Cup 2023 SA vs NED : How Netherland scored 104 runs in last 9 overs

ஆனால், கடைசி 9 ஓவர்களில் மேலும் 104 ரன்களை சேர்த்து மொத்தமாக 245 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி இதை எதிர்பார்க்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியில் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 20 ரன்களை தாண்டவில்லை. ஏழாவது இடத்தில் பேட்டிங் ஆட வந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் கடைசி வரை நின்று நெதர்லாந்து 245 ரன்கள் எட்ட முக்கிய காரணமாக இருந்தார்.

எட்வர்ட்ஸ் 69 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். வான் டேர் மெர்வி 19 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். ஆர்யன் தத் 9 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். கடைசி 9 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 104 ரன்கள் குவித்தது நெதர்லாந்து அணி.

தென்னாப்பிரிக்கா அணிக்கு 246 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது நெதர்லாந்து. தென்னாப்பிரிக்கா அணியின் லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா, கோட்ஸி ஆகியோர் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் மேல் வாரிக் கொடுத்தனர்.

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் இருந்தே நெதர்லாந்து அணியின் அந்த கடைசி 9 ஓவர்கள் எத்தனை முக்கியமானது என்பது தெரிய வரும். ஸ்காட் எட்வர்ட்ஸ் அதில் முக்கிய பங்காற்றினார்.

Story first published: Tuesday, October 17, 2023, 21:35 [IST]
Other articles published on Oct 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+