For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை அரையிறுதி - நியூசிலாந்தை வெல்ல இந்தியாவுக்கு உள்ள 5 காரணங்கள்.. பதிலடி தயார்

ஐசிசி உலக கோப்பை முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் புதன்கிழமை பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த உலகக்கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடம் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது.

ICC ODI World cup 2023 semi final - 5 Reason india will beat NZ

இதற்கு இந்தியா பழித்தீர்க்கும் முனைப்புடன் இருக்கிறது. ஆனால் கடந்த முறை போல் இந்திய ரசிகர்கள் பயப்பட தேவையில்லை. ஏனென்றால் இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற ஐந்து முக்கிய காரணங்கள் இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். கடந்த அரை இறுதியில் நாம் தோற்றத்திற்கு முக்கிய காரணம் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.

அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி இரண்டு நாட்களாக நடந்தது. அந்த சூழல் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் ஆகும். இதேபோன்று இந்தியாவுக்கு உள்ள இரண்டாவது மிகப்பெரிய காரணம் ரோகித் சர்மாவும் கில்லும் நன்றாக விளையாடி வருகிறார்கள்.

ஆனால் கடந்த முறை இப்படி ஒரு தொடக்கம் நமக்கு அமையவில்லை. கில் தற்போது உலகின் முதல் நிலை வீரராக இருப்பதால் அவர் மீது நம்பிக்கை வைக்கலாம். மேலும் ரோகித் சர்மாவும் நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று நம்பலாம். மூன்றாவது முக்கிய காரணம் இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் தான்.

விராட் கோலி இந்த தொடரில் நல்ல பார்மில் இருக்கிறார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுலும் நல்ல இன்னிங்ஸ் ஆடிய மனவலிமையுடன் இருக்கிறார்கள். ஒருவேளை தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தாலும் நடுவரிசை வீரர்கள் அணியை காப்பாற்றுவார்கள். இந்தியா வெற்றி பெற சாதகமாக இருக்கும். நான்காவது காரணம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு தான். பும்ரா, முகமது சிராஜ், முஹம்மது சமி ஆகிய மூன்று வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர்.

இவர்கள் எந்த ஆடுகளத்தில் வேண்டுமானாலும் ஆட்டத்தின் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் விக்கெட்டை வீழ்த்தக்கூடிய தரம் இருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் பயப்படத் தேவையில்லை. ஐந்தாவது காரணம் சுழற் பந்துவீச்சு படை தான் குல்திப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆக இருவரும் நியூசிலாந்து வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள். இதனால் இவ்விருவரும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்கலாம் என்ற நியூஸிலாந்தின் எண்ணம் பலிக்காது.

Story first published: Tuesday, November 14, 2023, 17:46 [IST]
Other articles published on Nov 14, 2023
English summary
ICC ODI World cup 2023 semi final - 5 Reason india will beat NZ உலக கோப்பை அரையிறுதி - நியூசிலாந்தை வெல்ல இந்தியாவுக்கு உள்ள 5 காரணங்கள்.. பதிலடி தயார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+