Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்ப்பே இல்ல.. இனி கோலியின் சாதனை எல்லாம் யாராலையும் முறியடிக்க முடியாது.. கங்குலி பாராட்டு

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் விராட் கோலி பாராட்டி பேசியுள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, இனி இது போன்ற ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

ICC ODI World cup 2023 - sourav Ganguly lauds virat kohli for scoring 50th odi century

அதுவும் விராட் கோலி இன்னும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அவருக்கு தற்போது 35 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் நிறைய நாட்கள் இந்தியாவுக்காக விளையாடுவார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும். என் வாழ்க்கை முழுவதும் நான் சச்சின் டெண்டுல்கர் கூடவே விளையாடி இருக்கிறேன்.

சச்சின் டெண்டுல்கர் 49 சதத்தை அடித்தபோது நாங்கள் அனைவரும் இது ஒரு மிகப்பெரிய சாதனை யாரையும் முறியடிக்க முடியாது என்று நினைத்தும். ஆனால் விராட் கோலி அதனை செய்து காட்டியிருக்கிறார். அதுவும் இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடிய ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருக்கிறது. பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கங்குலி கூறியுள்ளார்.

இந்தத் தொடரில் விராட் கோலி 10 போட்டிகளில் விளையாடி 211 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரியாக 101 இந்த தொடரில் அவர் அடித்திருக்கிறார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் கோலிக்கு சொந்தமாக இருக்கிறது.கோலிக்கும் கங்குலிக்கும் பிரச்சனை என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் அவருக்காக கங்குலி வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 17, 2023, 6:56 [IST]
Other articles published on Nov 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+