Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்போ இருந்த பாகிஸ்தான் டீமே வேற ஆனால் இப்போ.. பாக். அணி குறித்து கங்குலி கடும் விமர்சனம்

மும்பை : 2028 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான தோல்வியில் இருந்து மீள்வதே கஷ்டம் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

முன்னதாக அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தவிர எந்த பேட்ஸ்மேனும் ரன் குவிக்கவில்லை.

ICC ODI World Cup 2023 : Sourav Ganguly says current Pakistan team cant comeback

இந்திய அணி 192 ரன்கள் என்ற சிறிய இலக்கை எளிதாக எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சிலும் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் முன்னாள் வீரர்கள் பலர் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இதற்கு முன் இருந்த பாகிஸ்தான் அணியுடன், தற்போதைய அணியை ஒப்பிட்டு விமர்சனம் செய்து இருக்கிறார். தற்போதைய பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது அழுத்தம் காரணமாக தடுமாறி வருகிறது என்றும் கூறி இருக்கிறார்.

கங்குலி இது பற்றி கூறுகையில், "எங்கள் காலத்தில், பாகிஸ்தான் வேறு மாதிரி அணியை கொண்டு ஆடியது. அந்த அணி, இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணியைப் போன்றது இல்லை. இந்த அணி பேட்டிங் அழுத்தம் காரணமாக தடுமாறி வருகிறது. இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி பெறுவது கடினம்" என்றார்.

10 ஆண்டுகளுக்கு முன் வரை பாகிஸ்தான் அணியில் நல்ல அனுபவ வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். இன்சமாம் உல் ஹக், ஷாஹித் அப்ரிடி, வேகப் பந்துவீச்சாளர் முகமது சமி, ஆல் - ரவுண்டர் அப்துல் ரசாக், சோயப் மாலிக், முகமது யூசுப், யூனிஸ் கான் என பல போட்டிகளை வென்று கொடுத்த வீரர்கள் அணியில் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற பின் பாகிஸ்தான் அணி தடுமாறத் துவங்கியது. 2015 சாம்பியன்ஸ் ட்ராபி வென்றதே அந்த அணி கடைசியாக வென்ற பெரிய தொடர். தற்போது பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷஹீன் ஷா அப்ரிடி மட்டுமே முன்னணி வீரர்களாக அறியப்படுகிறார்கள்.

அவர்கள் இருவரும் கூட அனைத்து போட்டிகளிலும் சரியாக ஆடுவதில்லை. இந்த நிலையில் தான் கங்குலி தற்போதைய பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

Story first published: Wednesday, October 18, 2023, 13:26 [IST]
Other articles published on Oct 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+