Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா குறித்து ரிச்சர்ட்ஸ் தைரியமான கணிப்பு.. எதையும் மாற்றாதீங்க,இல்ல சாம்பலாயிடும் என எச்சரிக்கை

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், சேவாக் ஆகியோருக்கு முன்பெல்லாம் அதிரடி நாயகன் என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தான். இரண்டு முறை உலக கோப்பையில் வென்று பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் ரிச்சர்ட்ஸ், இந்தியா குறித்து தைரியமான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இந்தியாவுக்கு மனதளவில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதன் மூலம் அவர்கள் தொடர்ந்து இதே போல் விளையாடுவார்கள். இந்த மன மாற்றத்தை இந்தியா தொடர வேண்டும்.

ICC ODI World cup 2023 - Vivian Richards prediction about team india

நான் மட்டும் தற்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தால் இதேபோல் தொடர்ந்து விளையாடுங்கள் அதிரடியை காட்டுங்கள் என்று தான் கூறுவேன். இந்தியாவின் இந்த திட்டம் இதுவரை அவர்களுக்கு நன்றாக பயன் ஆகியிருக்கிறது. இதை அவர்கள் மாற்றினால் அனைத்துமே சாம்பலாகிவிடும். என்னை பொறுத்தவரையில் இந்திய அணி இந்த உலக கோப்பையில் தோல்வியே பெறாமல் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்.

இதனை அவர்கள் அடைய நிச்சயமாக போராடுவார்கள். எப்போதுமே ஒரு பயம் வீரர்களுக்கு வரும், நாம் தொடர்ந்து இவ்வளோ நாள் சிறப்பாக விளையாடிவிட்டோம். ஏதேனும் ஒரு மோசமான ஆட்டம் நமக்கு வந்து விடுமோ என்ற அச்சம் உணர்வு இருக்கும். அந்த அச்ச உணர்வை அவர்கள் அழித்து எதிர்மறை எண்ணங்களை ஒழித்து விளையாட வேண்டும்.

நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். விராட் கோலி தாம் தான் சிறந்த வீரர்கள் என்பதை அவர் எப்போதுமே களத்தில் காட்டி வருகிறார். சச்சினுக்கு நிகரான வீரராக விராட் கோலி நிச்சயம் இருப்பார். உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பு விராட் கோலி கடின காலத்தில் இருந்தார். அப்போது சில நண்பர்கள் அவருடைய தலைக்கு குறி வைத்து பேசினார்கள்.

ஆனால் தற்போது அனைத்தும் மாறிவிட்டது. இந்தியாவிப் இந்த செயல்பாட்டுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் மற்ற நிபுணர்களையும் பாராட்ட வேண்டும். ஏனென்றால் அனைவரின் ஆதரவும் இந்திய அணிக்கு இருக்கிறது. இந்த ஆதரவும் உதவியும் இருந்தால் நிச்சயம் நாம் போட்டியின் உச்சத்தில் இருக்க முடியும்.

விராட் கோலி போன்ற ஒரு வீரர் தன்னுடைய வாழ்க்கையின் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வந்திருப்பது சிறப்புமிக்கது பார்ம் என்பது தற்காலிகமானது தான். ஆனால் திறமை என்பது எப்போதுமே இருக்கும். விராட் கோலிக்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். விராட் கோலிக்கும் மற்ற வீரருக்கும் உள்ள வித்தியாசம் அவருடைய மனவலிமை தான். அவருடைய மனவலிமை தான் அவரை மேலும் உழைக்க தூண்டுகிறது. சில வீரர்களால் மட்டும்தான் அப்படி செயல்பட முடியும் என்று விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, November 13, 2023, 0:10 [IST]
Other articles published on Nov 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+