Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு தவறை மட்டும் செய்தால் சோலி முடிஞ்சுரும்.. இந்திய அணியை எச்சரித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்

பெங்களூர் : இந்திய அணி ஒரு சரியாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை அரை இறுதியில் மாற்ற நினைத்தால். நிலைமை மோசமாகிவிடும் என எச்சரித்து இருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்.

இந்திய கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இருக்கிறது. அடுத்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.

தற்போது இந்தியா வலுவாக இருப்பதால் அரை இறுதி, இறுதியிலும் இந்தியா வெல்லும் என ரசிகர்கள் கூறினாலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என பெரிய அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. எனவே, இந்தியா கவனமாகவே இருக்க வேண்டும்.

ICC ODI World Cup 2023 : Vivian Richards says India should not change approach

இந்த நிலையில் தான் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணியை எச்சரித்து இருக்கிறார். இந்திய வீரர்கள் முழு பலத்துடன் போட்டிகளில் ஆடி வெல்வது போலவே கடைசி வரை ஆடலாம் என நினைக்கிறார்கள். அந்த அணுகுமுறை நன்றாக வேலை செய்துள்ளது. ஆனால், அதில் மாற்றம் செய்தால் நிலைமை மோசமாகி விடும் எனக் கூறினார்.

அதே போல, இதுவரை வென்று விட்டோம், அரை இறுதியில் ஒருவேளை தோற்று விடுவோமோ என்ற பயம் அவர்களிடம் இருக்கலாம். அதையும் அவர்கள் சரி செய்து கொள்ள வேண்டும் என அவர் கூறி இருக்கிறார்.

அதாவது, தற்போது இந்திய அணி சம நிலையுடன் உள்ளது. எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் போட்டிகளில் வெற்றி ஒன்றே குறிக்கோள் என மனதில் வைத்து அனைத்து வீரர்களுக்கும் ஆடி வருகிறார்கள். அணியில் மாற்றம் செய்தாலோ, போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றுவது, பந்துவீச்சில் புதிய பரிசோதனைகளை செய்வது என எதையாவது இந்திய அணி மாற்ற நினைத்தால் அது தோல்விக்கு வழி வகுக்கும் என எச்சரித்து இருக்கிறார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

"இந்த உலகக்கோப்பை தொடரில், இந்தியாவின் மனநிலை இதே போலவே கடைசி வரை ஆடலாம் என்பதாக இருக்கிறது. அவர்கள் மனநிலை நிச்சயம் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்கள் அறையில் நான் இருந்தால் என் மனநிலையும் முழு பலத்துடன் அடித்து ஆடுவோம் என்பதாகத் தான் இருக்கும். இந்த அணுகுமுறை இதுவரை வேலை செய்துள்ளது. அதை மாற்றினால் நிலைமை மோசமாகி விடும்." என்றார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

மேலும், "அவர்கள் தோல்வியே சந்திக்காமல் இந்த உலகக்கோப்பையை நிறைவு செய்வார்கள் என நான் நம்புகிறேன். ஆனால், அவர்களிடம் ஒரு பயம் இருக்கலாம். இதுவரை வெற்றிகள் மட்டுமே பெற்று இருக்கிறோம். அரை இறுதியில் ஒரு தோல்வி காத்துக் கொண்டு இருக்கிறதோ என அவர்கள் நினைக்கலாம். அந்த எதிர்மறை எண்ணங்களை அவர்கள் சரி செய்து கொள்ள வேண்டும்" என்றார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

Story first published: Saturday, November 11, 2023, 18:49 [IST]
Other articles published on Nov 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+