Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூட்யூபில் கிரிக்கெட் மேட்ச் ஹைலைட்ஸ் வராது.. எல்லாம் பேஸ்புக் செய்த வேலை.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

மும்பை : உலகக்கோப்பை போட்டிகளில் ஹைலைட்ஸ் வீடியோவை யூட்யூபில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வருகிறார்கள்.

2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் பாதி போட்டிகள் முடிவடைந்து விட்டன.

எப்போதும் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த உடன் போட்டியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து போட்டி ஹைலைட்ஸ் வீடியோ யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும். அது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என எந்த நாட்டில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உட்பட எந்த அமைப்பால் போட்டிகள் நடத்தப்பட்டாலும் யூட்யூபில் ஹைலைட்ஸ் வீடியோவை ரசிகர்களுக்காக பதிவேற்றம் செய்து வந்தனர்.

ஐபிஎல் தொடருக்கு மட்டுமே ஹைலைட்ஸ் யூட்யூபில் பார்க்க முடியாத சூழல் இருந்தது. ஆனால், தற்போது 2023 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி ஹைலைட்ஸ் உலகின் முன்னணி வீடியோ ஊடகமான யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. தினமும் கிரிக்கெட் ரசிகர்கள், யூட்யூபில் உலகக்கோப்பை போட்டி ஹைலைட்ஸ் குறித்து தேடி சோர்ந்து போய் இருக்கின்றனர்.

ICC ODI World Cup 2023 : Why world cup match highlights are not available in youtube?

இதற்கு முக்கிய காரணமே பேஸ்புக் தான் என தெரிய வந்துள்ளது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் உள்ளிட்ட முக்கிய ஐசிசி தொடர்களுக்கான போட்டி ஹைலைட்ஸ் மற்றும் பிற வீடியோக்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே வெளியிட வேண்டும் என ஐசிசியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா.

சரி, பேஸ்புக்கில் போய் ஹைலைட்ஸ் வீடியோக்களை பார்ப்போம் என்றால் அதை தேடி கண்டுபிடிக்கவே நீண்ட நேரம் ஆனது. ஐசிசியின் பேஸ்புக் பக்கத்தில் உலகக்கோப்பை போட்டி ஹைலைட்ஸ் வீடியோக்கள் உள்ளன. ஆனால், அதை அதிக அளவிலான ரசிகர்கள் பார்க்கவில்லை. அதனால், யூட்யூப் போல அதிக கமெண்ட்ஸ் இல்லை. பல ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவிடவும், படிக்கவுமே யூட்யூபில் வீடியோ பார்க்கும் நிலையில், பேஸ்புக்கில் அந்த சுவாரசியம் இல்லை.

பேஸ்புக்கை தவிர்த்து, ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் போட்டி ஹைலைட்ஸ்-ஐ இலவசமாகவே காணலாம். அதுவும் ஐந்து மொழிகளில் அந்த வீடியோவை பார்க்கலாம். அதனால், இந்த உலகக்கோப்பை போட்டிகளை காண யூட்யூபில் பார்க்க முடியாது என்பதே சோகமான விஷயம். அதனால், கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள்.

Story first published: Thursday, October 26, 2023, 11:04 [IST]
Other articles published on Oct 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+