மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் யுவராஜ் சிங் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு யுவராஜ் சிங் பங்கு மிக முக்கியமானது.
அந்தத் தொடரில் நாயகன் விருதை யுவராஜ் சிங் தான் கைப்பற்றி இருந்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று தந்தார்.

ஆனால் கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் அதிலிருந்து உடல் நலத்தால் சரிவை கண்டார். இதனை அடுத்து மீண்டும் இந்தியா அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார். ஆனால் அவர் நினைத்தது போல் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கவில்லை. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங் தோனியின் தாமும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது.
கிரிக்கெட்டுக்காக தான் நண்பராக இருந்தும் என்று கூறினார். யுவராஜ் சிங் என்ற பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு வீடியோ ஒரு வெளியாகி உள்ளது. அதில் யுவராஜ் சிங், விராட் கோலி உடன் இருக்கும் நட்பு குறித்து பேசி இருக்கிறார். அதில் முன்பு போல் விராட் கோலி இடம் தற்போது பேசுவது கிடையாது. ஏனென்றால் விராட் கோலி தற்போது மிகவும் பிசியாகிவிட்டார்.
இதனால் நான் அவரை தொந்தரவு செய்வதில்லை. இளம் வயதில் விராட் கோலியின் பெயர் சீக்கு. ஆனால் இன்று அந்த சீக்குவின் பெயர் விராட் கோலி, இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.நாங்கள் அனைவருமே இந்தியாவுக்காக விளையாடும் போது உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் விராட் கோலி கேப்டன் ஆக ஆன பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர் ஒரு புதிய உச்சத்தை உடல் பகுதியில் நிர்ணயம் செய்தார்.
விராட் கோலி தன்னைத் தானே மிக சிறந்த கால்பந்து வீரர் என்று நினைத்துக் கொள்வார். ஆனால் அவரை விட எனக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் இளம் வீரராக இருப்பதால் நன்றாக ஓடுவார். விராட் கோலி தன்னை ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று நினைத்துக் கொள்வார். ஆனால் உண்மை அதுவல்ல. ஆனால் கிரிக்கெட்டில் வேண்டுமானாலும் இவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல் உடல் தகுதியில் இருப்பார் என்று யுவராஜ் சிங் கிண்டலடித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி கேப்டனாக இருந்த விராட் கோலி யுவராஜ் சிங் அணியில் சேர்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக யுவராஜ் இப்படி பேசி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.