Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2027 உலகக்கோப்பை.. 12 மைதானங்கள், புதிய உலகக்கோப்பை விதிமுறைகள்.. ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 12 விளையாட்டு மைதானங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இம்முறை ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது.

இந்த பிரம்மாண்ட உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 57 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் தென்னாப்பிரிக்காவில் 8 மைதானங்களும், ஜிம்பாப்வேயில் 3 மைதானங்களும், நமீபியாவில் 1 மைதானமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ICC ODI World Cup 2027 12 Venues amp amp New Tournament Format Announced by ICC

மைதானங்களின் முழு விவரம்:

தென்னாப்பிரிக்கா (8 மைதானங்கள்):

1. வாண்டரர்ஸ் மைதானம், ஜோகன்னஸ்பர்க்
2. செஞ்சூரியன், டிஷ்வானே
3. நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப் டவுன்
4. கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம், டர்பன்
5. செயின்ட் ஜார்ஜ் பார்க், கெபெர்ஹா
6. மங்காங் ஓவல், புளூம்பொன்டைன்
7. போலண்ட் பார்க், பார்ல்
8. பஃபலோ பார்க், குகோம்போ சிட்டி

ஜிம்பாப்வே (3 மைதானங்கள்):

9. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
10. குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
11. ஃபேல் மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம், விக்டோரியா ஃபால்ஸ்

நமீபியா (1 மைதானம்):

12. நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்

இவற்றில் நமீபியா நாடு தனது வரலாற்றிலேயே முதன்முறையாக ஐசிசி-யின் ஆண்கள் உலகக்கோப்பை போட்டிகளை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்த 2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தியிருந்தன.

உலகக்கோப்பையின் புதிய விதிமுறைகள்:

2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முற்றிலும் புதிய போட்டி வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் சீரீஸ், சூப்பர் 7 போன்ற சுற்றுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

சூப்பர் சீரிஸ் தகுதிச் சுற்று: தரவரிசையில் 12 முதல் 14 வரையிலான இடங்களில் உள்ள அணிகள், உலகக்கோப்பை தொடருக்குத் தகுதி பெறுவதற்காக 'சூப்பர் சீரிஸ்' தகுதிச் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் ஒரே ஒரு அணி, உலகக்கோப்பையின் லீக் சுற்றுக்குத் தகுதி பெறும்.

லீக் சுற்று (குழு நிலைப் போட்டிகள்): முதன்மைத் தொடருக்குத் தகுதியடையும் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்த தொடக்க சுற்றில் மொத்தம் 30 லீக் போட்டிகள் நடைபெறும்.

சூப்பர் 7 சுற்று: லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் இரண்டு பிரிவுகளையும் சேர்த்து அடுத்த சிறந்த இடத்தைப் பிடிக்கும் ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூப்பர் 7 சுற்றில் ரவுண்ட்-ராபின் முறையில் மொத்தம் 21 போட்டிகள் நடத்தப்படும்.

ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சால் ஏற்பட்ட வினை.. விவிஎஸ் லக்ஷ்மன் vs. கம்பீர் பிரச்சனை.. டி வில்லியர்ஸ் கருத்து

ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சால் ஏற்பட்ட வினை.. விவிஎஸ் லக்ஷ்மன் vs. கம்பீர் பிரச்சனை.. டி வில்லியர்ஸ் கருத்து

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி: சூப்பர் 7 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதலாவது அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியும், 4-வது இடம் பிடிக்கும் அணியும் மோதும். இரண்டாவது அரையிறுதியில் 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தும்.

Story first published: Friday, July 31, 2026, 9:51 [IST]
Other articles published on Jul 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+