Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை.. இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குரூப்.. ஆஸியும் இணைந்தது

கேப் டவுன்: 2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பை தொடர், 2027 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்திய அணி, ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தகுதிச் சுற்று மூலம் மேலும் ஒரு அணி இந்தப் பிரிவில் இணையும். இதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

ICC ODI World cup

மறுபுறம், குரூப் 'பி' பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்று மூலம் தேர்வாகும் மற்றொரு அணியும் இடம்பெறவுள்ளது. இந்த முறை ஐசிசி மூன்று கட்ட வடிவிலான புதிய போட்டி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐசிசி விதிகள் அதிரடி மாற்றம்.. இன்று முதல் 73 புதிய விதிகள் கிரிக்கெட்டில் அமல்.. விவரம்

ஐசிசி விதிகள் அதிரடி மாற்றம்.. இன்று முதல் 73 புதிய விதிகள் கிரிக்கெட்டில் அமல்.. விவரம்

சூப்பர் சீரிஸ்: தகுதி பெற்ற 14 அணிகளில் குறைந்த தரவரிசையில் உள்ள 3 அணிகள் இதில் மோதும். இதில் முதலிடம் பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி பிரதான 12 அணிகளுடன் இணையும்.

லீக் சுற்று: இதில் மொத்தம் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 30 போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து அடுத்த சிறந்த இடத்தைப் பிடிக்கும் ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்கு தகுதி பெறும்.

IND vs WI: இந்திய டி20 அணியில் அதிரடி மாற்றம்.. தமிழக வீரர் விடுவிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

Also Read

IND vs WI: இந்திய டி20 அணியில் அதிரடி மாற்றம்.. தமிழக வீரர் விடுவிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

சூப்பர் 7: இந்த சுற்றில் 21 போட்டிகள் நடைபெறும். இதிலிருந்து புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இந்த உலகக் கோப்பை தொடர் மொத்தம் 12 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நமீபியா வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 1, 2026, 21:28 [IST]
Other articles published on Oct 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+