Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலககோப்பை 2027: இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் எப்போது? அட்டவணை விவரம்

மும்பை: ஐசிசி 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்தியா பாகிஸ்தான் அணி அடுத்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 நடைபெறுகிறது.

Ind vs Pak

இந்திய அணி தங்களுடைய முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 7ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பின்பு அக்டோபர் 10ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி, அக்டோபர் 14ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

மீண்டும் அக்டோபர் 17ஆம் தேதி தகுதிச்சுற்று பங்கேற்கும் அணியுடன் இந்தியா விளையாடுகிறது. அதன் பிறகு அக்டோபர் 24 ஆம் தேதி ஜிம்பாப்வே அணியுடன் இந்தியா எதிர்கொள்கிறது. இதேபோன்று குரூப் பி சுற்றில் வங்கதேசம் இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா இலங்கை நியூசிலாந்து மற்றும் தகுதி சுற்றில் பங்கேற்கும் ஒரு அணி இடம்பெறுகிறது. ஒரு வேலை பாகிஸ்தான் அணி சூப்பர் 7 சுற்றுக்கு தகுதி பெற்றால், மீண்டும் இந்தியாவுடன் நவம்பர் 7ஆம் தேதி கேப் டவுனில் மோதும். இதே போன்று அக்டோபர் 28ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் சூப்பர் 7 சுற்றில் மோதும்.

ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை.. இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குரூப்.. ஆஸியும் இணைந்தது

ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை.. இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குரூப்.. ஆஸியும் இணைந்தது

அக்டோபர் 31ஆம் தேதி இந்தியா, தென்னாப்பிரிக்கா உடன் பலப்பரீட்சை நடத்தும். நியூசிலாந்து அணியுடன் நவம்பர் 4ஆம் தேதியும், இங்கிலாந்து அணியுடன் நவம்பர் 11ஆம் தேதி இந்தியா விளையாடும். இந்தத் தொடரில் அரையிறுதி ஆட்டம் நவம்பர் 17ஆம் தேதி கேப்டவுனிலும், இரண்டாவது அரையிறுதி நவம்பர் 18ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 21ஆம் தேதி ஜோகன்ஸ்பர்கில் நடைபெற உள்ளது.

Story first published: Thursday, October 1, 2026, 22:03 [IST]
Other articles published on Oct 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+