Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA உடன் தோல்வி.. ஆப்கானின் சாம்பியன்ஸ் கோப்பை கனவு என்ன ஆனது? கடைசி 2 இடத்திற்கு போட்டி

மும்பை : ஐசிசி உலக கோப்பை புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிதான் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்று icc அறிவித்துள்ளது.இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கிவிட்டது.

இதில் மிகப்பெரிய அணியாக கருதப்படும் இலங்கை, இங்கிலாந்து போன்ற நாடுகள் தொடர் தோல்வியை தழுவியதால் அவர்களால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ICC odi world cup points table 2023 - Afghanistan qualified to champions trophy

இந்த நிலையில் இந்திய அணி 16 புள்ளிகள் பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதேபோன்று தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இதே போன்று போட்டியை பாகிஸ்தான் தான் நடத்துகிறது என்பதால் அந்த அணி நேரடியாக தகுதி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சொல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் தென்னாப்பிரிக்க அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்லுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும் தற்போது புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.

இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றிருப்பது உறுதியாகி விட்டது. தற்போது ஆறு அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன. ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தை யார் பிடிக்கப் போகிறார்கள் என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கிறது. இங்கிலாந்தும் வங்கதேசமும் தலா நான்கு புள்ளிகள் உடன் முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை இங்கிலாந்து படுதோல்வியை தழுவினாலும் கூட நெதர்லாந்து அணி இந்தியாவுடன் தோற்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும்.

இதனால் எட்டாவது ஆக பிடிக்கப் போவது வங்கதேசமா இல்லை நெதர்லாந்தா என்ற கேள்விதான் எழுந்துள்ளது. இவர்கள் தோல்வியை தழுவி இலங்கையின் ரன் ரேட்டை விட கீழே சென்றால், இலங்கை 8வது இடத்தை பிடிக்க கூடும். வங்கதேச அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது பகல் கனவு. இதே போன்று பலம் வாய்ந்த இந்தியாவை நெதர்லாந்து வீழ்த்துவதும் எளிதானது கிடையாது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் எவ்வளவு மோசமாக தோற்பதை தவிர்க்கிறார்களோ அதன் மூலம் அவர்களுடைய ரன் ரேட் வைத்து சாம்பியன்ஸ் கோப்பை கனவை நினைவாக்கி கொள்ளலாம்.

Story first published: Saturday, November 11, 2023, 0:10 [IST]
Other articles published on Nov 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+