For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலககோப்பை அரையிறுதியில் இந்தியாவின் ரெக்கார்ட்.. அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார்? முழு பட்டியல்

மும்பை : ஐசிசி உலக கோப்பை அரை இறுதியில் இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில் உலககோப்பை வரலாற்றில் அரையிறுதியில் இந்திய அணியின் செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கிறது?

இதைப் போன்று ஒவ்வொரு அரை இறுதியிலும் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி தங்களுடைய முதல் அரை இறுதி ஆட்டத்தை 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடியது.

ICC ODI World cup semi final india records win and losses - Most runs in semi final list

இதில் இந்திய வீரர் யாஷ்பால் சர்மா அதிகபட்சமாக 61 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் அசாருதீன் அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார். இதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 1996 உலககோப்பை அரையிறுதியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது.

அந்த போட்டியில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 65 ரன்கள் சேர்த்தார்.இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி கென்யாவை எதிர்கொண்டது. இதில் கேப்டன் கங்குலி அதிகபட்சமாக 111 ரன்கள் குவித்தார். இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை அடுத்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது.

இதில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் சேர்த்தார். இதில் இந்தியா வெற்றி பெற்றது. 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வுக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக தோனி 65 ரன்கள் சேர்த்தார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து இடம் தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் ஜடேஜா 78 ரன்கள் சேர்த்தார். இந்த உலகக்கோப்பை அரை இறுதி வரலாற்றை பார்த்தீர்கள் என்றால் இந்தியா தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அரை இறுதியில் தோற்றது கிடையாது. அப்படி பார்த்தால் கடந்த 2 முறை தோற்றதால் இம்முறை வெற்றி நிச்சயம் நடக்கும் என எதிர்பார்க்கலாம். மொடததமாக இந்தியா இதுவரை 7 முறை உலககோப்பை ஒருநாள் போட்டி அரையிறுதியில் விளையாடி 4 தோல்வி, 3 வெற்றி பெற்று இருக்கிறது.

Story first published: Wednesday, November 15, 2023, 6:40 [IST]
Other articles published on Nov 15, 2023
English summary
ICC ODI World cup semi final india records win and losses - Most runs in semi final list உலககோப்பை அரையிறுதியில் இந்தியாவின் ரெக்கார்ட்.. அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார்? முழு பட்டியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+