மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 130 கோடி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய ஆட்டம் இன்று நடைபெறுகிறது. முதலாவது அரையிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
கடந்த முறை உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தான் தோல்வியை தழுவியது. அதற்கு பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் ரோகித் சர்மா கையிலோ இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால் ஒரு நபரோ இரண்டு நபரோ சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த அணியும் சரியாக விளையாட வேண்டும்.
சரியாக விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த தவறும் செய்து விடக்கூடாது அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் அனைவரின் கவனமும் டாப் 3 வீரர்கள் மீதுதான் இருக்கிறது. ஆனால் அரை இறுதி போன்ற முக்கிய ஆட்டத்தில் நடுவரிசை வீரர்கள் தங்களுடைய செயல்பாட்டை சரியாக செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
உதாரணத்திற்கு கடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் கம்பீர் தோனி போன்றோர் தான். இந்திய அணியை காப்பாற்றினார்கள் அதே போல் இம்முறை கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் கூட்டணி அமைத்தால் மட்டுமே இந்தியா வெல்ல முடியும். இதற்கு காரணம் இருக்கிறது நியூசிலாந்த அணி இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக டாப் 3 வீரர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள்.
இதனால் ரோகித், விராட் கோலி மற்றும் கில் ஆகியோருக்கு எப்படி ஆட்டம் இழக்கு வைக்கலாம் என தனித்திட்டம் எல்லாம் வகுத்து வைத்திருப்பார்கள். அப்படி இருக்க அவுட் ஆப் சிலபஸில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி வருவது போல் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாட வேண்டும். உதாரணத்திற்கு இந்திய அணியின் டாப் 3 விக்கெட் விரைவில் ஆட்டம் இழந்தாலும் நடுவரிசை வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்தியா அணி நியூசிலாந்தை வீழ்த்த முடியும். மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 130 கோடி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய ஆட்டம் இன்று நடைபெறுகிறது. முதலாவது அரையிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
கடந்த முறை உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தான் தோல்வியை தழுவியது. அதற்கு பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் ரோகித் சர்மா கையிலோ இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால் ஒரு நபரோ இரண்டு நபரோ சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த அணியும் சரியாக விளையாட வேண்டும்.
சரியாக விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த தவறும் செய்து விடக்கூடாது அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் அனைவரின் கவனமும் டாப் 3 வீரர்கள் மீதுதான் இருக்கிறது. ஆனால் அரை இறுதி போன்ற முக்கிய ஆட்டத்தில் நடுவரிசை வீரர்கள் தங்களுடைய செயல்பாட்டை சரியாக செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
உதாரணத்திற்கு கடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் கம்பீர் தோனி போன்றோர் தான். இந்திய அணியை காப்பாற்றினார்கள் அதே போல் இம்முறை கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் கூட்டணி அமைத்தால் மட்டுமே இந்தியா வெல்ல முடியும். இதற்கு காரணம் இருக்கிறது நியூசிலாந்த அணி இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக டாப் 3 வீரர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள்.
இதனால் ரோகித், விராட் கோலி மற்றும் கில் ஆகியோருக்கு எப்படி ஆட்டம் இழக்கு வைக்கலாம் என தனித்திட்டம் எல்லாம் வகுத்து வைத்திருப்பார்கள். அப்படி இருக்க அவுட் ஆப் சிலபஸில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி வருவது போல் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாட வேண்டும். உதாரணத்திற்கு இந்திய அணியின் டாப் 3 விக்கெட் விரைவில் ஆட்டம் இழந்தாலும் நடுவரிசை வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்தியா அணி நியூசிலாந்தை வீழ்த்த முடியும்.