Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களின் திறமையை காட்டி போராடினோம்.. கடின வாய்ப்பை விட்டோம்.. தெ.ஆப்பிரிக்க கேப்டன் பெவுமா கருத்து

கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வழக்கம் போல பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி சென்றுள்ளது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதுபோன்று பந்துவீச்சிலும் ஆறு ஓவரில் 60 ரன்களை எடுக்க விட்டது.

ICC ODI World cup - South africa captain temba bavuma about his team loss vs aus in semi final

இது அந்த அணிக்கு பெரிய சரிவை கொடுத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பைனலில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கட்டும்.

இன்றைய ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்த போட்டியில் எங்களுடைய திறமையை மற்றும் போராட்ட குணம் ஆகியவற்றை நாங்கள் வெளிப்படுத்தினோம். தோல்வியை நாங்கள் சீக்கிரமாக ஒப்புக்கொள்ளவில்லை. பேட்டிங்களும் பந்து வீச்சிலும் நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. அந்த இடத்தில் தான் நாங்கள் தோல்வியை கண்டோம்.

ஆஸ்திரேலிய அணி எங்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தால் நிச்சயமாக நல்ல இலக்கை நிர்ணயிக்க கடுமையாக போராட வேண்டும். எனினும் மில்லர் மற்றும் கிலாசன் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் கிளாசன் தொடர்ந்து களத்தில் நிற்க முடியவில்லை. வழக்கம் போல் டேவிட் மில்லர் பிரமாதமாக விளையாடினார். அவருடைய இன்னிங்ஸ்தான் எங்கள் அணியின் குணத்திற்கான ஹைலைட் என்று நான் கூறுவேன்.

இது போன்ற நெருக்கடியில் இப்படி விளையாடுவது சாதாரண விஷயம் கிடையாது. ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 70 ரன் மேல் அடித்து விட்டார்கள். அதன் மூலம் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு எளிதாகி விட்டது. எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் மார்க்கரம் மற்றும் மகாராஜா ஆகியோர் ஆஸிக்கு நெருக்கடி கொடுத்தார்கள். எங்களுக்கு சில கடின வாய்ப்புகள் வந்தது. அதை நாங்கள் கோட்டை விட்டோம்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை. ஆனால் coetzee ஒரு போர் வீரர் போல் செயல்பட்டார். அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அவர் பவுலிங் வீசுகிறேன் என்று கூறினார். தன்னுடைய கெரியரை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று யோசித்து இருப்பார். இருப்பினும் இந்த போட்டியை அவர் மறக்க மாட்டார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் குயின் டன் டி காக் ஒரு சிறந்த ஜாம்பவானாக அறியப்படுவார் என்று பெவுமா கூறினார்.

Story first published: Thursday, November 16, 2023, 23:35 [IST]
Other articles published on Nov 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+