ஹேய் கொரோனா.. இப்ப என்ன பண்ணுவ.. கடைசி ஆயுதத்தை எடுத்த ஐசிசி.. ரசிகர்கள் குஷி!
துபாய் : கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டுள்ளன.
Recommended Video
இந்த நிலையில், கிரிக்கெட் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் தங்களிடம் இருக்கும் பழைய போட்டிகளை மீண்டும் ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐசிசி அமைப்பு தங்களிடம் உள்ள சுமார் 45 ஆண்டு பழமையான கிரிக்கெட் போட்டி வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் பிரம்மாண்ட டி20 தொடரான ஐபிஎல் முதல் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளும் தடைபட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் சோர்ந்து போய் உள்ளனர்.

ரசிகர்கள் முடங்கி உள்ளனர்
காரணம், கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். அவர்கள் ஏற்கனவே பார்த்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும், மீண்டும் பார்த்து சோர்ந்து உள்ளனர். அவர்களை குஷிப்படுத்த ஐசிசி அதிரடி முடிவு எடுத்துள்ளது.

பழைய கிரிக்கெட் வீடியோக்கள்
தங்களிடம் உள்ள பழைய கிரிக்கெட் போட்டி வீடியோக்களை தொலைக்காட்சிகளுக்கு பகிர்ந்துள்ளனர். ஐசிசி அமைப்பிடம் 1975 உலகக்கோப்பை தொடர் முதல் பல்வேறு சிறந்த கிரிக்கெட் தொடர்களின் வீடியோக்கள் உள்ளன.

இளம் ரசிகர்கள் குஷி
இந்தியா - பாகிஸ்தான் ஆஷஸ் தொடர், ஆகியவற்றின் வீடியோக்களும் இதில் அடங்கும். இந்த வீடியோக்களை இனி ரசிகர்கள் கிரிக்கெட் சேனல்களில் கண்டு களிக்கலாம். இளம் ரசிகர்கள் தாங்கள் இதுவரை பார்த்திராத பல அரிய போட்டிகளை காணலாம்.

ஏன் இந்த முடிவு?
கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுத் துறை முடங்கி இருப்பதால், ரசிகர்களுடன் இணைந்து இருக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், அதனால், சிறந்த முடிவாக பழைய கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக கூறி உள்ளது ஐசிசி.


Click it and Unblock the Notifications