Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வருது… வருது… இனி டெஸ்ட் போட்டி ஜெர்சியிலும் நம்பர் வருது

துபாய்: ரசிகர்களை விருப்பத்தை மனதில் கொண்டு இனி டெஸ்ட் போட்டிகளிலும் ஜெர்சி எண்களை கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், திட்டமிட்டுள்ளது.

கிரிக்கெட் உலகை பொறுத்தவரை.. எண்கள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. ஆண்டுகள் பல கடந்தும் சில வீரர்களின் ஜெர்சி எண்கள் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ரசிகர்களும் தங்கள் பிடித்த வீரர்களின் எண்ணுடன் அந்த ஜெர்சியை உற்று நோக்கி மகிழ்ச்சி அடைவர். தற்போது ரசிகர்களை கருத்தில் கொண்டு இனி டெஸ்ட் போட்டிகளிலும் ஜெர்சி எண்களை கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளது.

டெஸ்டில் மாற்றம்

டெஸ்டில் மாற்றம்

சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பகல் இரவு ஆட்டம், பிங்க் பந்து என மாற்றங்கள் நீடித்து கொண்டுள்ளன.

ஜெர்சி எண்கள்

ஜெர்சி எண்கள்

இந்நிலையில்.. இனி டெஸ்ட் போட்டிகளில் ஜெர்சி எண்கள் வரப்போகிறது. அதன் ஒரு முயற்சியாக..ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் ஜெர்சி எண்களை அறிமுகப்பபடுத்த உள்ளது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

ஆகஸ்டில் ஆஷஸ் தொடரில் இந்த நடைமுறையை கொண்டு வர இருக்கிறது. 2019ம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச டெஸ்ட் உலக கோப்பை தொடர் ஆரம்பமாகிறது.

கவுண்டி கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்

அதற்கு முன்பாக... ஷெப்பீல்டு அணி மற்றும் இங்கீலீஷ் கவுண்டி கிரிக்கெட் தொடரில் இது போன்று ஜெர்சிகளில் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் வீரர் டிராவிஸ் ஹெட் கூறி இருப்பதாவது:

ரசிகர்களுக்கு உதவும்

ரசிகர்களுக்கு உதவும்

இந்த புதிய மாற்றம் ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்த வீரர்களைக் கண்டறிய உதவும். மேலும், இதனால் எவ்வித தொந்தரவு இல்லை. ரசிகர்களுக்கு உதவுகிறது என்றால் நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

Story first published: Wednesday, March 20, 2019, 17:19 [IST]
Other articles published on Mar 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+