10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் அந்த அதிசயம்..!! ஐசிசி அதிரடி பிளான்..!! காரணம் இதான்!!
Recommended Video
துபாய்: 2020, 2021 என 2 ஆண்டுகளிலும் அடுத்தடுத்து டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி திட்டமிள்ளதால் ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.
இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டி தொடக்கத்தில் மழை தான் அதிகளவு விளையாடியது. மழையால் போட்டி பாதிப்பு, ஆட்டம் ரத்து என்ற செய்திகள் அதிக விமர்சனத்தை எழுப்பியது.
மழையால் துவக்கத்தில் பாதிக்கப்பட்டாலும் இறுதியில் சுவாரசியமாக முடிவடைந்தது. அதனை தொடர்ந்து 2020ம் ஆண்டு 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும் டி20 உலக கோப்பையை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

மேலும் ஒரு டி 20
அடுத்தாண்டு அதாவது 2020ல் ஆஸ்திரேலிய நாட்டில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அந்த ஐசிசி தொடருக்கு பின்னர் அடுத்த ஆண்டே மேலும் ஒரு டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. மேலும் அதற்கான காரணத்தையும் தற்போது தெரிவித்துள்ளது ஐசிசி நிர்வாகம்.

டி 20 உலக கோப்பை
இது குறித்து ஐசிசி கூறியிருப்பதாவது: 2020ம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. அதன் பிறகு உடனடியாக அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலக கோப்பை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரத்து செய்து உள்ளது.

அணிகளின் எண்ணிக்கை
அதற்கு பதிலாக எட்டு அணிகள் பங்குபெறும் போட்டியை 16 அணிகளாக உயர்த்தி டி 20 உலக கோப்பை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. எனவே எங்களது திட்டத்தின்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறும்.

அடுத்தடுத்து ஆண்டுகள்
முன்னதாக, 2009, 2010ம் ஆண்டு இதுபோன்று அடுத்தடுத்த ஆண்டுகளில் டி 20 உலக கோப்பை தொடர் நடந்தது என்று ஐசிசி நிர்வாகம் கூறி இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் ஏராளமான கிரிக்கெட் தொடர்கள் உள்ளதால் ஏற்கனவே குஷியில் இருக்கின்றனர். இப்போது ஐசிசியின் இந்த அறிவிப்பு அவர்களை மேலும் குஷிப்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications