ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் விருது.. 3 இந்தியர்கள் போட்டி
துபாய்: ஒவ்வொரு மாதத்திலும் சிறந்து விளையாடும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் என விருதை வழங்கி வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தற்போது பரிந்துரையில் தேர்வாகி இருக்கிறார்கள்.
இதில் ஆடவர் பிரிவில் இரண்டு இந்தியர்களும் மகளிர் பிரிவில் ஒரு இந்தியரும் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இதில் இந்திய ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மொத்தமாக ஏழு டி20 போட்டிகளில் விளையாடி 314 ரன்கள் செப்டம்பர் மாதம் அடித்து இருந்தார். இதில் அவர் மூன்று அரைசதமும், ஸ்ட்ரைக் ரேட் 200 என்ற அளவில் வைத்திருந்தார். இதன் மூலம் ஐசிசி டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் அபிஷேக் ஷர்மா அதிக புள்ளிகள் உடன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் பிடித்து வந்தார்.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியாவின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 17 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதில் அவருடைய எக்கனாமி 6.27 என்ற அளவில் இருக்கிறது. குறிப்பாக uae அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளும், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் தரவரிசை பட்டியலில் ஒன்பது இடங்கள் முன்னேறி 12வது இடத்தை அவர் பிடித்திருந்தார். இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் ஜிம்பாப்வே வீரர் இடம் பெற்றிருந்தார். செப்டம்பர் மாதம் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி 497 ரன்கள் அடித்திருந்தார். இலங்கை, நமீபியா போன்ற அணிகளுக்கு எதிராக அவர் அபாரமாக விளையாடினார்.
ஆப்பிரிக்கா பிராந்திய டி20 உலக கோப்பை தகுதி சுற்றில் 111 ரன்கள், 65 ரன்கள் மற்றும் 72 ரன்கள் என அபாரமாக விளையாடிய ஜிம்பாப்வே அணி டி20 உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
அதேபோன்று மகளிர் பிரிவில் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த ஸ்மிருதி மந்தானா 308 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 77 என்ற அளவிலும் ஸ்ட்ரைக் ரேட் 135 என்ற அளவில் உள்ளது. இதுபோன்று தென்னாப்பிரிக்கா வீராங்கனை தஸ்மின் பிரீட்ஸ் மற்றும் பாகிஸ்தான் தொடக்க வீராங்கனை சித்ரா அமின் ஆகியோர் மகளிர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications