Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி விருதுகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்.. குல்தீப்பை முந்திய 25 வயது வீரர்

மும்பை: ஐசிசி ஒவ்வொரு மாதத்திலும் சிறந்து விளையாடும் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்குகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் இந்தியர்கள் விருதை கைப்பற்றி இருக்கிறார்கள். அது யார் என்று தற்போது பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அபிஷேக் சர்மா, 7 போட்டிகளில் 314 ரன்கள் அடித்து அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்று பெருமையை பெற்றார். மூன்று அரை சதம் அடித்த அவர், ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல் வைத்திருந்தார்.

ICC Player award

இதில் அவருடைய சராசரி 44 என்று அளவில் இருந்தது. இதனால் அபிஷேக் ஷர்மாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அபிஷேக் ஷர்மாவுடன் குல்தீப் யாதவ் அந்த தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதேபோன்று ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் பென்னட் ஆகியோர் இந்த போட்டியில் இருந்தனர்.

இந்த விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அபிஷேக் ஷர்மா, தமக்கு உறுதுணையாக இருந்த சக அணியினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஐசிசி விருது வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.சில முக்கிய போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி அதனால் அணி வென்றிருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்.

அதனால் இந்த விருது கிடைத்திருக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமைதான். இந்திய அணியை கடுமையான சூழலில் இருந்து காப்பாற்றி வெற்றி பெற வைத்ததற்கு உண்மையிலேயே பெருமை கொள்கின்றேன். டி20 போட்டிகளில் எங்கள் அணி எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்பதை பார்த்தாலே எங்கள் அணியின் கலாச்சாரம் என்னவென்று உங்களுக்கு தெரியும்.

நாங்கள் எப்போதும் நல்ல பாசிட்டிவ்வான மனநிலையுடன் இருக்கின்றோம். எனக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டிய அனைத்து சக வீரர்களுக்கும் அணி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு இந்த விருது வழங்கிய ஐசிசி குழுவினருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மகளிர் பிரிவில் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா விருதை வென்றுள்ளார். இதில் ஒரு அரை சதம் மற்றும் தொடர்ந்து இரண்டு சதம் அடித்து ஸ்மிருதி மந்தானா அசத்தியுள்ளார்.

Story first published: Thursday, October 16, 2025, 20:05 [IST]
Other articles published on Oct 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+