
10 இயர்ஸ் சேலஞ்ச்
ட்விட்டரில் 10இயர்ஸ்சேலஞ்ச் (#10yearchallenge) என்ற பெயரில் பத்து வருடத்துக்கு முந்தைய மற்றும் தற்போதைய புகைப்படத்தை அடுத்துடுத்து பதிவிடும் சவால் பிரபலமாகி வருகிறது. இந்த சவால் மூலம் பத்து வருடத்தில் இருந்து தற்போது என்ன மாற்றம் நடந்துள்ளது என தெரிந்து கொள்ள முடிவதால் இது படு வேகமாக பிரபலமாகி வருகிறது.
தோனி சிக்ஸர்கள்
இதை ஐசிசி முழுமையாக பயன்படுத்தி பல்வேறு 10 வருட புகைப்பட ஒப்பீடுகளை வெளியிட்டு வருகிறது. அதில் தோனி 2009இல் சிக்ஸ் அடிக்கும் புகைப்படம் ஒன்றையும், 2019இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அடித்த சிக்ஸ் ஒன்றையும் ஒப்பிட்டுள்ளது.

ரசிகர்கள் குஷி
அந்த பதிவில், இப்போதும் சிக்ஸ் அடித்து தெறிக்கவிடுகிறார், சேஸிங்களை வெற்றிகரமாக முடித்து வைக்கிறார் என குறிப்பிட்டு தோனியை பெருமைப்படுத்தி இருந்தது ஐசிசி. தோனி ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இந்த பதிவின் கீழ் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை
மேலும், ஐசிசி 10 வருடத்துக்கு முன்பு இருந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையுடன், தற்போதைய தரவரிசையை ஒப்பிட்டுள்ளது. 2009இல் டெஸ்ட் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சந்தர்பால் முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர்களில் கம்பீர் மட்டுமே பத்தாவது இடம் பிடித்து முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளார். 2019இல் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் புஜாரா இருக்கிறார்.
ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை
அதே போல ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையையும் ஒப்பிட்டுள்ளது ஐசிசி. இதில் 2009இல் தோனியும், 2019இல் கோலியும் முதல் இடத்தில் இருக்கின்றனர்.
ராஸ் டெய்லர் நாக்-அவுட்
பல புகைப்படங்களை இது போல வெளியிட்டுள்ள ஐசிசி, ராஸ் டெய்லரின் என்றும் மாறாத, வேடிக்கையான பழக்கம் ஒன்றையும் குறிப்பிட்டு கேலி செய்துள்ளது. ராஸ் டெய்லர் சதம் அடித்தவுடன் நாக்கை வெளியில் நீட்டி தான் தன் சதத்தை கொண்டாடுவார். 2009இலும், 2019இலும் ராஸ் டெய்லர் இதே போல சதத்தை கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது ஐசிசி.


Click it and Unblock the Notifications