முரட்டு சிங்கிளின் மிரட்டல் சிக்ஸர்கள்...வாவ்.. வீடியோ வெளியிட்ட ஐசிசி!
டெல்லி : இந்திய மகளிர் அணி சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டி வரை முன்னேறி நம்பிக்கை அளித்தது.
இந்திய மகளிர் இறுதிப்போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற ரசிகர்களின் கனவை, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தகர்த்தனர். ஆயினும் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் என்ற பெருமையுடன் இந்தியா திரும்பியது மகளிர் அணி.

இந்த தொடரில் இளம்புயல் ஷெபாலி வர்மா, மிகுந்த நம்பிக்கையை அளித்தார். அவர் விளையாடிய 4 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். ஆனால் இறுதிப்போட்டி அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்திய மகளிர் அணியின் சமீபத்திய சிறப்புமிகு தருணங்களுக்கு தானும் ஒரு காரணமாக அமைந்து வருகிறார் இளம்புயல் ஷெபாலி வர்மா. 15 வயது மற்றும் 285 நாட்களில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடி, அரைசதத்தை அடித்த இவர், சச்சினின் இளம்வயதில் அரைசதம் அடித்த 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
அந்த போட்டியில் 73 ரன்களை அடித்த ஷெபாலி, போட்டி நாயகி விருதையும் தட்டி சென்றார். இந்த போட்டியின்போது இவர் அடித்த 6 பவுண்டரிகள் இந்த ரன்குவிப்பிற்கு காரணமாக இருந்தது.
இதேபோல ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பை தொடரின்போதும் இவர் முதலில் ஆடிய 4 போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப்போட்டி இவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.
ஆயினும் இந்த தொடரில் மொத்தமாக 9 சிக்ஸ்களை அடித்து அதகளம் செய்திருந்தார் ஷெபாலி. இந்த தொடரில் கூட்டாக இவர் மேற்கொண்ட சாதனை இது. இதுவரை 19 போட்டிகளில் விளையாடி, 487 ரன்களை குவித்துள்ள ஷெபாலி, டி20 போட்டிகளில் மொத்தமாக 58 பவுண்டரிகளையும் 21 சிக்ஸ்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் ஷெபாலி அடித்த அதிரடி சிக்ஸ்களின் வீடியோவை ஐசிசி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications