
பிரைடே பிளாஷ்பேக்
இந்த நிலையில் ஐசிசியானது பிளாஷ்பேக் பிரைடே என்ற தலைப்பில் பழைய போட்டோக்கள் இரண்டை எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளது. அதில் ஒன்று தோனி. இன்னொருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இருவருமே பழைய ஹேர்ஸ்டைலில் படு க்யூட்டாக காணப்படுகிறார்கள். இருவருக்குமே ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் உள்ளதால் கமெண்டுகளும் குவியத் தொடங்கி விட்டன.

ரசிகர்கள் கமெண்ட்
இந்தப் புகைப்படங்களைப் போட்டு "#FlashbackFriday இந்த இருவரும் எந்த ஐசிசி தொடரில் பங்கேற்றபோது இந்த ஸ்டைலில் இருந்தனர் என்று கேட்டுள்ளது ஐசிசி. இதையடுத்து பழைய நினைவுகளை கிளறி எடுத்து கமெண்டுகளைக் கொட்டி வருகின்றனர் ரசிகர்கள். அதிலும் தோனிக்குத்தான் அதிக கமெண்டுகள். லெஜன்ட் தோனி, கிங் மேன் தோனி என்று பலவிதமான கமெண்டுகளை தோனி வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறார்.

அழகு தோனி
இந்த புகைப்படத்தில் தோனி படு ஹேன்ட்சம்மா இருக்கிறார். ஆரம்ப கால தோனி இது. முன்பக்க தலையைப் பார்த்தால் ரஜினிகாந்த் மாதிரி இருக்கும்.. பின்னால் பறக்கும் தலையைப் பார்த்தால் ஹிப்பி ஸ்டைலில் இருக்கும். இரண்டையும் கலந்து கிரிக்கெட்டின் ஆரம்ப கால நாட்களில் அதகளம் செய்தவர் தோனி. அதிலும் பாகிஸ்தானில் விளையாடியபோது பொறி பறக்க வைத்த நாட்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முதல் முறையாக இவரது தலைமையில் உலகக் கோப்பையை வென்ற சமயத்தில்தான் தனது இந்த ஹேர்ஸ்டைலை வேறு மாதிரியாக மாற்றினார் தோனி.

வீட்டிலேயே முடக்கம்
கொரோனா லாக்டவுன் காரணமாக எங்குமே போட்டிகள் நடைபெறவில்லை. எல்லாமே முடங்கிப் போயுள்ளது. இதனால் தோனியும் தனது ராஞ்சி வீட்டிலேயே இருக்கிறார். வீட்டுக்குள்ளேயே மகளுடன் விளையாடுவதும், மனைவியுடன் ஜாலியாக அரட்டை அடிப்பதும், பைக் ஓட்டுவதுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்ககளும் அவ்வப்போது சாக்ஷியால் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

ஐபிஎல் கனவுகள்
தோனி ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாகவும், ஆயத்தமாகவும் இருந்தார். ஆனால் இடையில் வந்த கொரோனாவால் எல்லாமே வீணாகி விட்டது. இதனால் தோனி ரசிகர்கள் கவலை அடைந்தனர். அவரது ஓய்வு குறித்தும் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் எல்லாவற்றையும் இந்த ஒற்றைப் புகைப்படம் தகர்த்து விட்டது.. தோனி மீதான அன்பை ரசிகர்கள் விதம் விதமாக வெளிக்காட்டி வருவது தோனி ரசிகர்களையே உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications