For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உனக்கு மட்டும் இவ்ளோ பெரிசா தெரியுது.. அதான் அடிக்கிறே..!! ரன் மெஷினை அதகளம் பண்ணிய ஐசிசி

Recommended Video

Ashes 2019 : Steve Smith scored double century

துபாய்: ஸ்மித்தின் கண்களுக்கு பந்து பெரியதாக தெரிவதால் அசத்தலாக ஆடி வருகிறார் என்று ஐசிசி வேடிக்கையாக பாராட்டி உள்ளது.

நீங்கள் விளையாடக் கூடாது, ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்த போது, ஒட்டு மொத்தமாக நொறுங்கி தான் போனார் ஆஸி.யின் ஸ்டீவ் ஸ்மித். தண்டனை காலம் முடிந்து மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.

ஆஷஸ் தொடரில் அசத்தி வருகிறார். ஒரு பக்கம் ஆர்ச்சர் பந்தில் அடி வாங்கி ஓய்வு எடுக்கிறார். மறுபக்கம் மீண்டு வந்து இரட்டை சதத்தை அடித்து, சச்சின், கோலி ரெக்கார்டுகளை எல்லாம் சூ மந்திரகாளி என்று தட்டி தூக்கி இருக்கிறார்.

வாழ்த்து மழை

வாழ்த்து மழை

இந்த ஆண்டில் மிக சிறப்பான வீரராக வலம் வருகிறார் ஸ்மித். அவரது ஆட்டத் திறனை பார்த்து கம்பேக் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினும் மனதார பாராட்டி வாழ்த்தி உள்ளார். சச்சின் மட்டுமல்ல.. பல ஜாம்பவான்களும் ஸ்மித்தை பாராட்டி வருகின்றனர்.

ஐசிசி பாராட்டு

ஐசிசி பாராட்டு

அந்த வகையில் ஐசிசியும் தமது புகழ் மாலையை ஸ்மித்துக்கு டுவிட்டர் வாயிலாக சூட்டியிருக்கிறது. ஆனால்.. கொஞ்சம் வித்தியாசமாக. அதாவது, தமது பேட்டிங் வெற்றிக்கு ஸ்மித் என்ன செய்கிறார் என்பதை கிண்டலாக கூறியிருக்கிறது.

பந்து எப்படி தெரிகிறது?

அதில் மற்ற பேட்ஸ்மேன்கள் பந்தை எப்படி பார்க்கிறார்கள்? ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து எப்படி தெரிகிறது என்பதை வித்தியாசமான பார்வையில் ஐசிசி பதிவிட்டு உள்ளது. அதன்படி மற்ற பேட்ஸ் மேன்களுக்கு பந்து சிறியதாகவும், ஸ்மித்திற்கு மட்டும் பந்து பீச் பால் அளவில் தெரிவதாகவும் அதனால்தான் ஸ்மித்தால் இவ்வளவு சிறப்பாக விளையாட முடிகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

பலத்த காற்று

பலத்த காற்று

3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி வார்னர் விக்கெட்டை விரைவில் இழந்தது. 4வது விக்கெட்டுக்கு ஸ்மித் வந்தார். 30 ரன்களை அவர் எட்டிய போது, போட்டியின் நடுவே காற்று பலமாக வீசியது.

ஸ்வீப் ஷாட்

ஸ்வீப் ஷாட்

அதனால் ரசிகர்கள் இடையே இருந்த பீச் பால் ஒன்று மைதானத்தின் நடுவில் உருண்டு வர, அதை அப்படியே ஸ்வீப் ஷாட் அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். ஐசிசி அதை தான் தற்போது மேற்கோள் காட்டி பந்து பெரியதாக தெரிகிறது, அதனால் காட்டடி அடிக்கிறார் என்று கிண்டலடிக்க, அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Saturday, September 7, 2019, 12:36 [IST]
Other articles published on Sep 7, 2019
English summary
Icc praises steve smith and his wonderful batting through twitter.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+