Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி ரேங்கில் அதிரடி மாற்றம்.. டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் இவர்தான் இனி நம்பர் 1..கீழே சென்ற ஆஸி. வீரர்

சிட்னி: 2020ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் தற்போது ஐசிசி ரேங்கிங் பட்டியல் வெளியாகி உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி 20 ரேங்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலத்திற்கு பின் கிரிக்கெட் உலகம் மீண்டும் பிஸியாக தொடங்கி உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து பாகிஸ்தான் தொடர் என்று முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் நடந்து வருகிறது.

முக்கியமாக நியூசிலாந்து அணி இந்த முறை முழு பார்மில் டெஸ்ட் போட்டிகளில் கலக்கி வருகிறது. கடந்த வருட உலகக் கோப்பை போட்டியில் இருந்தே நியூசிலாந்து நல்ல பார்மில் உள்ளது.

புள்ளிகள் பட்டியல்

புள்ளிகள் பட்டியல்

2020ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் தற்போது ஐசிசி ரேங்கிங் பட்டியல் வெளியாகி உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி 20 ரேங்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் அணிகள் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.

டெஸ்ட்

டெஸ்ட்

அதன்படி டெஸ்ட் அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதன்படி டி 20 அணிகள் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இன்னொரு பக்கம் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி முதலிடத்திலும், ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திலும், பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், விராட் கோலி இரண்டாம் இடத்திலும், ஸ்மித் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் பட்டியல்

பேட்ஸ்மேன்கள் பட்டியல்

டி 20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டேவிட் மாலன் முதலிடத்திலும், பாபர் அசாம் இரண்டாம் இடத்திலும், கே.எல் ராகுல் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ஒருநாள் பவுலர்கள் பட்டியலில் டிரெண்ட் போல்ட் முதலிடத்திலும், முஜீப் ஊர் ரஹ்மான் இரண்டாம் இடத்திலும், பும்ரா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பவுலர்

டெஸ்ட் பவுலர்

டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் பாட் கும்மின்ஸ் முதலிடத்திலும், ஸ்டூவர்ட் போர்ட் இரண்டாம் இடத்திலும், நெய்ல் வாங்கர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டி 20 பவுலர்கள் பட்டியலில் ரஷீத் கான் முதலிடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் இரண்டாம் இடத்திலும், அடில் ரஷீத் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

ஒருநாள் ஆல் ரவுண்டர் பட்டியலில் ஷகீப் அல் ஹசன் முதலிடத்திலும், முகமது நபி இரண்டாம் இடத்திலும், கிறிஸ் வோக்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் ஆல் ரவுண்டர் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்திலும், ஜேசன் ஹோல்டர் இரண்டாம் இடத்திலும், ஜடேஜா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டி 20 ஆல் ரவுண்டர் பட்டியலில் முகமது நபி முதலிடத்திலும், ஷாகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்திலும், மேக்ஸ்வெல் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Story first published: Thursday, December 31, 2020, 11:52 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+