Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, ஆஸ்திரேலியா மட்டும்தான் உலகிலேயே சிறந்த டெஸ்ட் டீம்ஸ் - மைக்கேல் வாகன்

ஐசிசி தரவரிசை பட்டியல் முழுக்க முழுக்க குப்பையாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தாத நிலையில் அவை எப்படி 2வது மற்றும் 4வது இடத்தை பிடிக்க முடியும் என்றும் வாகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளை சிறப்பாக விளையாடி வருவதாகவும், அவையே சிறந்த அணிகள் என்றும் வாகன் கூறியுள்ளார்

"முழுக்க முழுக்க குப்பை"

ஐசிசி தரவரிசைப் பட்டியல் முழுக்க முழுக்க குப்பையாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

சிறப்பான செயல்பாடு இல்லை

சிறப்பான செயல்பாடு இல்லை

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 2வது மற்றும் 4வது இடங்களை பிடித்துள்ள நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் கடந்த 2 வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றும் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டு போட்டிகளில் தோல்வி

வெளிநாட்டு போட்டிகளில் தோல்வி

கடந்த 3, 4 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் குறிப்பாக வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற இங்கிலாந்து அணி போராடி வருவதாகவும் வாகன் குறிப்பிட்டுள்ளார்.

மைக்கேல் வாகன் சான்றிதழ்

மைக்கேல் வாகன் சான்றிதழ்

தங்களுடைய நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் மட்டும் வெற்றிபெற்றுவரும் இங்கிலாந்தை காட்டிலும் ஐசிசி தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான விளையாட்டை அளித்து வருவதாகவும் வாகன் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பானவை

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பானவை

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவையே தான் கருதுவதாகவும் வாகன் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சிறந்த சவாலை இந்திய அணி அளித்தததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சிறந்த போட்டியாக இருக்கும்

சிறந்த போட்டியாக இருக்கும்

தற்போதைய சூழலில் ஆஸ்திரேலியாவுடன் மோதுவதற்கு பொருத்தமான அணியாக உள்ளது இந்தியா மட்டுமே என்றும் அடுத்த ஆண்டில் இந்த இரு அணிகளும் மோதவுள்ள நிலையில், அப்போது இரு அணிகளும் மிகுந்த தகுதி வாய்ந்தவையாக இருக்கும் என்றும் வாகன் கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 26, 2019, 11:12 [IST]
Other articles published on Dec 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+