Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசையில் கிங் பாபர் அசாம் முன்னேற்றம்.. டாப் 10 இடத்திற்குள் நுழைந்தார்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் அரைசதங்கள் விளாசியதன் மூலம், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள பாபர் அசாம், ஆகஸ்ட் 12 புதன்கிழமை வெளியான தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

தற்போது அவர் 716 ரேட்டிங் புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாபர் அசாம் 88 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Babar azam

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாம் 10-வது இடத்திற்கு முன்னேறியதை அடுத்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஒரு இடம் சரிந்து 14-வது இடத்தைப் பிடித்துள்ளார்.பாபர் அசாம் தவிர, மற்றொரு பாகிஸ்தான் பேட்ஸ்மேனான அப்துல்லா ஷபிக் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

ஒரே WTC சைக்கிளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன்கள் பட்டியல்

ஒரே WTC சைக்கிளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன்கள் பட்டியல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்த ஷபிக், 25 இடங்கள் முன்னேறி உலக அளவில் 32-வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது அவர் 607 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில், சல்மான் அலி ஆகா மற்றும் ஷான் மசூத் முறையே ஆறு மற்றும் மூன்று இடங்கள் சரிந்து 38 மற்றும் 39-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஜிக் கான் ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் கேமர் ரோச் நான்கு இடங்கள் சரிந்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சஜித் கான், இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது அவர் 605 ரேட்டிங் புள்ளிகளுடன் 30-வது இடத்தில் உள்ளார்.

பிரபல ஐபிஎல் வீரர் அபிஷேக் கைது.. திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு

Also Read

பிரபல ஐபிஎல் வீரர் அபிஷேக் கைது.. திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 15 இடங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும், அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபர் 15 இடங்கள் முன்னேறி 55-வது இடத்தை எட்டியுள்ளார்.

Story first published: Wednesday, August 12, 2026, 17:06 [IST]
Other articles published on Aug 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+