Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் ரேங்கிங்.. மீண்டும் நம்பர் 1 ஆனது இந்தியா!

பெங்களூரு: ஐசிசியின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது முறையாக இந்திய அணி முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 0-2 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது.

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் 3வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தை இந்தியாவிடம் பறி கொடுத்தது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது முதலிடத்தைப் பிடித்து விட்டது.

கடந்த மாதம் 2வது இடம்

கடந்த மாதம் 2வது இடம்

கடந்த மாதம் இதே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி 2வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

மீண்டும் தென் ஆப்பிரி்க்காவால் லாபம்

மீண்டும் தென் ஆப்பிரி்க்காவால் லாபம்

இந்த நிலையில் தற்போது அதே தென் ஆப்பிரிக்காவே,. இந்திய அணிக்கு முதலிடம் கிடைக்கவும் உதவியுள்ளது சுவாரஸ்யமான ஒற்றுமையாகும்.

4 வருடத்திற்குப் பிறகு

4 வருடத்திற்குப் பிறகு

4 வருடத்திற்கு முன்பு இந்தியா டோணி தலைமையில் முதலிடத்தை முதல் முறையாகப் பிடித்து அசத்தியிருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 0-4 என்ற கணக்கில் கேவலமாக தோற்றதைத் தொடர்ந்து முதலிடத்தை இழந்தது.

110 புள்ளிகளுடன்

110 புள்ளிகளுடன்

தற்போது 110 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 3வது இடத்திற்குப் போய் விட்டது.

அடுத்த மாதம் காத்திருக்கும் ஆபத்து

அடுத்த மாதம் காத்திருக்கும் ஆபத்து

அடுத்த மாதம் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட அதை ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் வென்றால் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு வந்து விடும்.

Story first published: Sunday, January 17, 2016, 12:39 [IST]
Other articles published on Jan 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+