Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் தரவரிசை.. முதலிடத்தை இழந்தது இந்தியா... ஆஸ்திரேலியா நம்பர் 1 ஆனது!

கிறிஸ்ட்சர்ச்: எதிர்பார்த்தபடியே டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து விட்டது ஆஸ்திரேலியா. இதனால் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த இந்தியா 2வது இடத்திற்கு இறங்கி விட்டது.

இன்று கிறிஸ்ட்சர்ச்சில் முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியது.

இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை விட 2 புள்ளிகள் குறைந்து 2வது இடத்திற்குப் போய் விட்டது.

2-0 வெற்றி

2-0 வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை ஏற்கனவே வென்றிருந்த ஆஸ்திரேலியா, கடைசி மற்றும் 2வது போட்டியையும் வென்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது.

7 விக்கெட் வித்தியாசத்தில்

7 விக்கெட் வித்தியாசத்தில்

2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் என்ற நிலையில் ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா, மேலும் 2 விக்கெட்களை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

முதலிடம்

முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை எட்டிப் பிடித்தது. இதுவரை அங்கிருந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளியது.

ஜனவரி 16ல் முதலிடத்தைப் பெற்ற இந்தியா

ஜனவரி 16ல் முதலிடத்தைப் பெற்ற இந்தியா

இந்தியா கடந்த மாதம் 16ம் தேதி முதலிடத்தைப் பிடித்திரு்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றதால் நமக்கு முதலிடம் கிடைத்தது.

ஏழு கோடி பரிசு

ஏழு கோடி பரிசு

டெஸ்ட் தரவரிசையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ஐசிசி பரிசும் தருகிறது. அந்த வகையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 7 கோடி பரிசாக கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவுக்குப் பரிசு

ஆஸ்திரேலியாவுக்குப் பரிசு

ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை வைத்து தரவரிசை முடிவு செய்யப்படும். இப்போதைக்கு ஏப்ரல் மாதம் வரை வேறு டெஸ்ட் போட்டிகள் இல்லை என்பதால் ஆஸ்திரேலியாவுக்கே இந்த ரூ. 7 கோடி பரிசும் கிடைக்கும்.

இந்தியாவுக்கு ரூ. 3.50 கோடி

இந்தியாவுக்கு ரூ. 3.50 கோடி

2வது இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவுக்கு ரூ. 3.50 கோடி பரிசு கிடைக்கும். 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 4வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

Story first published: Wednesday, February 24, 2016, 14:59 [IST]
Other articles published on Feb 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+