Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC Rankings - இந்தியாவின் நம்பர் 1 டெஸ்ட் இடம் பறிப்போனது.. எந்த அணி பிடித்தது தெரியுமா?

மும்பை : தற்போது ஐபிஎல், டி20 உலக கோப்பை என கிரிக்கெட் ரசிகர்கள் பிஸியாக உள்ள நிலையில் அனைவரும் டெஸ்ட் போட்டியை சுத்தமாக மறந்து விட்டார்கள். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் தருணத்தில் ஐசிசி தரவரிசை பட்டியலை அவ்வப்போது வெளியிடும்.

இந்த நிலையில் வருடாந்திர ஐசிசி தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த இந்தியா தன்னுடைய இடத்தை இழந்து இருக்கிறது. இதன் மூலம் புதிய அணியாக ஆஸ்திரேலிய உருவெடுத்திருக்கிறது.

ICC Rankings - Indian national cricket team lost their no 1 test rankings


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவில் வீழ்த்தியது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருந்த இந்தியா 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் சரிந்தது.

இங்கிலாந்த அணி 105 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தென்னாபிரிக்க அணி 103 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்த அணி 96 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 89 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், இலங்கை 83 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 82 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் வங்கதேசம் 53 புள்ளிகள் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

அதேபோன்று ஒரு நாள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணி 226 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 257 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி எந்த போட்டியிலும் விளையாடாமல் எப்படி குறைந்தது என்று ரசிகர்கள் யோசிக்கலாம்.

ஆனால் அதற்கும் ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி மே 2021 ஆம் ஆண்டு இருந்து மே 2023 ஆம் ஆண்டு வரை நடந்த அனைத்து போட்டிகளையும் கணக்கிட்டு அதற்கு 50% புள்ளிகளும் மே 2023-லிருந்து தற்போது வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 100% புள்ளிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இந்தியா 4 புள்ளிகளை இழந்து இரண்டாவது இடத்திற்கு சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 3, 2024, 16:03 [IST]
Other articles published on May 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+