சட்டேஸ்வர் புஜாரா 'சூப்பர்'..!
துபாய்: ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் சட்டேஸ்வர் புஜாராவுக்கு நல்ல உயர்வு கிடைத்துள்ளது. இதுவரை 5வது இடத்தில் இருந்து வந்த புஜாரா தற்போது 3வது இடத்துக்குப் போய் விட்டார்.
புஜாரா 851 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் புஜாரா அபாரமான சதம் போட்டதே அவரது உயர்வுக்குக் காரணமாகியுள்ளது.

அப்படியே அதே 11வது இடத்தில் இருக்கிறார் விராத் கோஹ்லி. அவரும் தென் ஆப்பிரிக்க தொடரில் சதம் போட்டிருந்தார். இதனால் அவர் கீழே இறங்கிப் போகவில்லை.
டாப் 10 பேட்ஸ்மேன்கள் வரிசையில் புஜாரா மட்டுமே இந்தியர் ஆவார். அதேபோல டாப் 20 ப்ட்டியலில் புஜாரவும், கோஹ்லியும் மட்டுமே இந்தியர்கள் ஆவர். இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஏப் டி வில்லியர்ஸ் முதலிடத்தில் இருக்கிறார்.
சந்தர்பால் 2வது இடத்திலும், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 3வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரியான் ஹாரிஸ் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தை அடித்து நொறுக்கி ஆசஷ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்ற இவர்தான் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவின் பிலான்டர் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்திலும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டேல் ஸ்டெயின் உட்கார்ந்திருக்கிறார்.
இந்தியப் பந்து வீச்சாளர்களில் ஆர் அஸ்வின் 7வது இடத்தில் இருக்கிறார். அவரது இடம் மாறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா 9வது இடத்தில் இருக்கிறார்.
ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் அஸ்வின்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications