Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC Rankings: 230 இடங்கள் முன்னேறிய வைபவ் சூர்யவன்ஷி.. முதலிடம் பிடித்த சுப்மன் கில்

துபாய்: ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அரைசதங்கள் விளாசிய 26 வயது பேட்டரான சுப்மன் கில், ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்,

தற்போது சுப்மன் கில் 801 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 794 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மற்றொருபுறம், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி 767 புள்ளிகள் உடனும் மற்றும் ரோகித் சர்மா 758 புள்ளிகள் உடனும் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களில் நீடிக்கின்றனர்.

ICC Rankings

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில், ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்து தொடர் நாயகன் விருது வென்ற 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் அதிரடியாக முன்னேறியுள்ளார். பீகாரின் சமஸ்திபூரைச் சேர்ந்த இந்த இடதுகை பேட்டர், 536 ரேட்டிங் புள்ளிகளுடன் டி20 பேட்டிங் தரவரிசையில் தற்போது 48-வது இடத்தை பிடித்துள்ளார்.

WTC 2025-27: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடம்.. இந்தியாவுக்கு எந்த இடம்

WTC 2025-27: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடம்.. இந்தியாவுக்கு எந்த இடம்

அதே நேரத்தில், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் 1, 8 மற்றும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றிய இந்திய அணியின் அபிஷேக் சர்மா, தனது மோசமான ஆட்டத்தால் டி20 பேட்டிங் தரவரிசையில் ஒரு இடம் சரிந்து 819 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால், ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய துணை கேப்டன் திலக் வர்மா, இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்த பாகிஸ்தானின் புதிய டெஸ்ட் கேப்டன் பாபர் அசாம் நான்கு இடங்கள் முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் ஒன்பது இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார். 36 வயதான இவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

முடிவுக்கு வந்தது முகமது ஷமி கிரிக்கெட் வாழ்க்கை.. பிசிசிஐ தேர்வுக்குழு எடுத்த அதிரடி முடிவு

Also Read

முடிவுக்கு வந்தது முகமது ஷமி கிரிக்கெட் வாழ்க்கை.. பிசிசிஐ தேர்வுக்குழு எடுத்த அதிரடி முடிவு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இதன் மூலம் அவர் ஐந்து இடங்கள் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளார். எனினும், சக வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் ஆறு இடங்கள் சரிந்து 20-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Story first published: Wednesday, July 29, 2026, 17:27 [IST]
Other articles published on Jul 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+