For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC Rankings - இந்தியா செலுத்தும் ஆதிக்கம்.. தரவரிசை அனைத்திலும் நம்பர் 1.. வேற லெவல் சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்கும் அணி என்றால் அது இந்தியா தான். அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி தரவரிசை பட்டியல் இருக்கிறது.

இந்திய அணி டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறது. சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது என்பது அவ்வளவு கடினமான காரியமாக மாறிவிட்டது. நடப்பு உலக கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

ICC Rankings - Team India sheer dominance in all field latest rankings

மேலும் இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் அனைத்து பட்டியலிலும் இந்தியா தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இது குறித்து தற்போது பார்க்கலாம். டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

இதேபோன்று ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. இதே போன்று தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முதல் இடத்தில் உள்ளார்.

இதேபோன்று ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் நம்பர் ஒன் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார்.

இதேபோன்று டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் வரிசையில் நம்பர் ஒன் வீரராக ஜடேஜா இருக்கிறார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். டி20 பவுலர்கள் பட்டியலில் மட்டும் தான் இந்திய வீரர்கள் நம்பர் ஒன் இடத்தில் இல்லை. மற்ற அனைத்துமே இந்தியாவின் ஆதிக்கமே இருக்கிறது.

Story first published: Wednesday, November 8, 2023, 14:45 [IST]
Other articles published on Nov 8, 2023
English summary
ICC Rankings - Team India sheer dominance in all field latest rankings ICC Rankings - இந்தியா செலுத்தும் ஆதிக்கம்.. தரவரிசை அனைத்திலும் நம்பர் 1.. வேற லெவல் சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+