ICC Rankings: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடம் பிடித்து சாதனை.. 3 பிரிவிலும் இந்தியர்கள் நம்பர்1
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் டி20 போட்டிகளாக நடைபெற்று வருகிறது. இதில் 34 வயதான வருண் சக்கரவர்த்தி, யுஏஇ அணிக்கு எதிராக நான்கு ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஐசிசி t20 பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி வருண் சக்கரவர்த்தி முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலர் என்ற பெருமையை பெறும் மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு பும்ரா, ரவி பிஸ்னாய் ஆகியோர் இந்த இடத்தை பிடித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஐசிசி தரவரிசை பட்டியலில் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் இடம் பிடித்த தமிழக வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி பிடித்து இருக்கிறார். தமிழக வீரர் அஸ்வின், டெஸ்டில் இந்த சாதனையை ஏற்கனவே படைத்துள்ள நிலையில் டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி அசத்தியுள்ளார்.
இதேபோன்று நியூசிலாந்து வீரர் ஜேக்கப் இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகேல் ஹுசைன் மூன்றாவது இடத்திலும் ஆஸ்திரேலிய வீரர் அடம் சாம்பா நான்காம் இடத்தையும் பிடித்திருக்கின்றனர். இது போன்று ஆசிய கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்ட நுவன் துசாரா ஆறு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் சுஃப்யான் முக்கீம் 11வது இடத்திலும், அப்ரார் அகமது 16வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோன்று ஆசிய கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்திப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி தற்போது 23வது இடத்தை பிடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் t20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் இரண்டாவது இடத்தையும், மற்றொரு இங்கிலாந்து வீரரான ஜாஸ் பட்லர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இரண்டு இடங்கள் முன்னேறி 11 வது இடத்தையும், ஏய்டன் மார்க்கரம் 10 இடங்கள் முன்னேறி 30 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.இலங்கை வீரர் பதும் நிஷாங்கா ஆறாம் இடத்தையும், ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 19 வது இட்த்தையும் பிடித்துள்ளனர்.
இதே போன்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில், டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் 39 வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார். இந்த பட்டியலில் அபிஷேக் ஷர்மா நான்கு இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சையிம் அயூப் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications