For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம.. மீண்டும் "சாம்பியன்ஸ் டிராபி".. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐசிசி!

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை மீண்டும் அறிமுகம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ஐசிசி.

செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, ஐபிஎல் தொடரை பிசிசிஐ தொடங்குகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, கடந்த மே 29 அன்று மும்பையில் நடந்த "SGM" மீட்டிங்கிற்கு பிறகு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (எஸ்ஜிஎம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

 இந்தியாவில் டி20

இந்தியாவில் டி20

இந்த நிலையில், நேற்று (மே.1) நடந்த ஐசிசி ஆலோசனை கூட்டத்தில், 2023 லிருந்து 2031 வரையிலான எட்டு வருடங்களுக்கான கிரிக்கெட் தொடர்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பி.சி.சி.ஐ. சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 கால அவகாசம்

கால அவகாசம்

இந்த கூட்டத்தில், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கொரோனாவுக்கு மத்தியில் இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க, பிசிசிஐ விடுத்த கால அவகாச கோரிக்கையை ஐ.சி.சி. ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதன்படி 20 ஓவர் உலக கோப்பை குறித்து முடிவெடுக்க, வரும் 28ம் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் பி.சி.சி.ஐ. தெரிவிக்கும் திட்டத்தின்படி 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஐ.சி.சி. தனது இறுதி முடிவை எடுத்து அறிவிக்கும்.

 10ல் இருந்து 14

10ல் இருந்து 14

மேலும், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவது என்றும், 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை 16-ல் இருந்து 20 ஆக உயர்த்துவது என்றும், இதே போல் 2027-ம் ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 14 ஆக உயர்த்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி

மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி

2024-ம் ஆண்டில் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்குள் டாப்-8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ்கோப்பை போட்டியை 2 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றை 4 முறையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 2017ம் ஆண்டோடு நிறுத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடரை மீண்டும் அறிமுகம் செய்திருக்கிறது ஐசிசி. எட்டு அணி பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் நடத்தப்படும்.

Story first published: Wednesday, June 2, 2021, 11:39 [IST]
Other articles published on Jun 2, 2021
English summary
icc re introduced Champions Trophy -ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+