டெஸ்ட் தரவரிசை.. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிந்தைய மாற்றம் இது!
இங்கிலாந்து : லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் முடிவை தொடர்ந்து ஐசிசி புதிய தரவரிசையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இங்கே காணலாம்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை:
டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் கோஹ்லி முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 34 இடங்கள் முன்னேறி 50 ஆவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணியின் விக்கெட்கீப்பேர் பேட்ஸ்மேன் ஜானி பைர்ஸ்டாவ் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அஸ்வின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 67 ஆம் இடத்தில் இருந்து 57ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முரளி விஜய் 8 இடங்கள் பின்தங்கி 33ஆவது இடத்திற்கும்,தினேஷ் கார்த்திக் 18 இடங்கள் பின் தங்கி 195ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
பந்துவீச்சாளர் தரவரிசை :
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
கிறிஸ் வோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 32ஆவது இடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டர் தரவரிசை :
சிறப்பாக விளையாடி சதம் அடித்த கிறிஸ் வோக்ஸ் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஏழாவது இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
Story first published: Tuesday, August 14, 2018, 11:57 [IST]
Other articles published on Aug 14, 2018


Click it and Unblock the Notifications