For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அண்டர்டேக்கராக மாறிய மேக்ஸ்வெல்.. ஐசிசி வெளியிட்ட மாஸ் வீடியோ.. கதிகலங்கிய ரசிகர்கள்

மும்பை : 90ஸ் கிட்ஸ்களுக்கு WWE மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் என்றால் அவ்வளவு பிரியம். அண்டர்டேக்கர் சுற்றி எழுதப்பட்ட கட்டுக் கதைகளை உண்மை என்று நினைத்து வாழ்ந்த ஒரு தலைமுறையே இருந்தது.

இந்த நிலையில் கிரிக்கெட் களத்தில் ஒரு வீரர் அண்டர்டேக்கர் போல் செயல்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதனை ஐசிசி தங்களது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறது.

ICC Released video about Glenn maxwell by comparing with undertaker

அதாவது மேக்ஸ்வெல் கடந்த வாரத்தில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். அதில் அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. எனினும் மூன்று நாட்கள் ஓய்வில் இருந்த மேக்ஸ்வெல் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார். திரும்பிய போட்டியிலே கடும் நெருக்கடியில் ஆஸ்திரேலிய அணி இருந்தபோது அவர் களமிறங்கினார்.

ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தது. அப்போது மேக்ஸ்வெல் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரி, சிக்ஸர் என அடித்து நொறுக்கினார். ஒரு கட்டத்தில் சதம் விளாசிய மேக்ஸ்வெல் வலியால் துடித்தார்.

தம்மால் கொஞ்சம் கூட நிற்க முடியாமல் உடலில் உள்ள அனைத்து பகுதிகளும் வலி இருந்ததால் அப்படியே களத்தில் படுத்து விட்டார். அண்டர்டேக்கர் எப்படி போட்டிக்கு வருவதற்கு முன் சவப்பெட்டியில் படுத்திருப்பாரோ, அதே போல் மேக்ஸ்வெல் படுத்திருந்தார். உடனே நடுவர்களும் மருத்துவ குழுவினரும் மேக்ஸ்வெலை நோக்கி ஓடி வந்தார்கள். பத்து வினாடிகள் அப்படியே படுத்திருந்த மேக்ஸ்வெல் திடீரென்று அண்டர்டேக்கர் எந்திரிப்பது போல் களத்தில் எந்திரித்தார்.

இதனை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தனர். தற்போது இந்த வீடியோவை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஐசிசி மேக்ஸ்வெல் வீடியோவுக்கு பதிலாக அண்டர்டேக்கர் இன் சண்டைக் காட்சி ஆடியோவை போட்டு அமர்க்களம் படுத்தி விட்டார்கள்.

Story first published: Thursday, November 9, 2023, 17:10 [IST]
Other articles published on Nov 9, 2023
English summary
ICC Released video about Glenn maxwell by comparing with undertaker அண்டர்டேக்கராக மாறிய மேக்ஸ்வெல்.. ஐசிசி வெளியிட்ட மாஸ் வீடியோ.. கதிகலங்கிய ரசிகர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+