For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி…!! உங்க பொசிஷன் இப்போ ரொம்ப டேஞ்ஜர்..! காலி செய்ய காத்திருக்கும் ஸ்டார் வீரர்..!

துபாய்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் புஜாராவை பின்னுக்கு தள்ளி முன்னேறி இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.

எட்ஜ்பாஸ்டன் ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2 இன்னிங்ஸ் களிலும் சதம் எடுத்து சாதனை புரிந்தார். அவரது அற்புதமான பேட்டிங், ஆஸ்திரேலியாவுக்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்தது.

இந் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் தரவரிசையை ஐசிசி வெளியிட்டு உள்ளது. அவர் தரவரிசையில் மீண்டும் 3ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். அந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த புஜாரா 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தரவரிசை வெளியீடு

தரவரிசை வெளியீடு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தர வரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

பின்தங்கிய புஜாரா

பின்தங்கிய புஜாரா

2வது இடத்தில் நியூசிலாந்து கேன் வில்லியம்சன் 913 புள்ளிகளில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 903 புள்ளிகளில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்திய வீரர் புஜாரா 881 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.

முதலிடத்துக்கு ஆபத்து

முதலிடத்துக்கு ஆபத்து

விராட் கோலி தற்போது 922 புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். இருந்தாலும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் இதே பார்மில் ஆடினால் கோலியின் இடம் ஆட்டம் காண்பது உறுதி. ஆக... கோலியின் இடத்துக்கு ஆபத்து.

கமின்ஸ் முதலிடம்

கமின்ஸ் முதலிடம்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாட் கமின்ஸ் 898 புள்ளிகளுடன் டெஸ்ட் பவுலிங் முதலிடத்தை உறுதி செய்தார். மெக்ராத், ஷேன் வார்னுக்கு அடுத்ததாக இந்த புள்ளிகளை எட்டியவர் என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் கமின்ஸ்.

100 விக். சாதனை

100 விக். சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராட் 16ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டர்களில் கிறிஸ் வோக்ஸ் மொயின் அலியை பின்னுக்கு தள்ளி 9ம் இடத்தில் உள்ளார்.

Story first published: Tuesday, August 6, 2019, 20:42 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
Icc releases test rank list, Australia player steve smith spotted 3rd place.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X