Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை காலி செய்ய ஸ்மித் வெயிட்டிங்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முறியடிப்பாரா..?

துபாய்: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில், கோலியின் முதலிடத்தை நெருங்கி வருகிறார் ஸ்டீவ் ஸ்மித்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது அந்த இடத்தை தட்டிப் பறிக்க காத்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.

Icc releases test ranking and kohli leads in 1st place

ஆஷஸ் தொடரில் ஸ்மித், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த ஸ்மித், 2வது டெஸ்ட்டில் அரைசதம் அடித்தார்.

விராட் கோலி, 922 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு பின்னால் 913 புள்ளிகளுடன் ஸ்மித், 2வது இடத்தை பிடித்துள்ளார். அந்த இடத்தில் 887 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களைப் பொறுத்தவரை கோலியைத் தவிர, டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில், புஜாரா இருக்கிறார். அவர் 881 புள்ளிகளுடன் 4வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, 794 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார். லார்ட்ஸ் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய பேட் கம்மின்ஸ், 914 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ஜடேஜா, 3வது இடத்தில் இருக்கிறார். அணிகள் பட்டியலில் இந்தியா, முதலிடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து, 2வது இடத்திலும் தென் ஆப்ரிக்கா, 3வது இடத்திலும் உள்ளன.

Story first published: Monday, August 19, 2019, 22:28 [IST]
Other articles published on Aug 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+