Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் ஆட்டத்தை அப்படியே சுருட்டி வீசிய ஏமாத்துக்காரர்..! இந்த நிலைமை மாறுவது இனி கஷ்டம்

Recommended Video

கோலியின் சாதனைகளை அடிச்சு நொறுக்கிய ஸ்மித்

துபாய்: டெஸ்ட் தர வரிசையில் எதிர்பார்த்தபடியே, கோலியை பின்னுக்கு தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை வெளியிட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்திருக்கிறார். பவுலிர்களில் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

937 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடத்தை எட்டி சாதனை படைத்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம், ஆஷஸ் தொடரில் அவரின் அபார ஆட்டம் தான். டிசம்பர் 2017ம் ஆண்டு ஸ்மித் எடுத்த 947 புள்ளிகளை பெற இன்னும் 10 புள்ளிகள் தேவைப்படுகிறது.

10 புள்ளிகள் வரும்

10 புள்ளிகள் வரும்

இன்னும் ஒரு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. எனவே அந்த டெஸ்டிலும் வழக்கம் போல தமது மாயாஜால பேட்டிங்கை காட்டிலும் நிச்சயம் அந்த 10 புள்ளிகளை எளிதாக தட்டிச் செல்வார்.

கோலிக்கு 2ம் இடம்

கோலிக்கு 2ம் இடம்

2வது இடத்தில், விராட் கோலி 903 புள்ளிகளுடன் தொடர்கிறார். 3வது இடம் முதல் 10வது இடம் வரை முறையே கேன் வில்லியம்சன், புஜாரா, ஹென்றி நிகோலஸ், ஜோ ரூட், அஜின்கயே ரகானே, லாதம், திமுத் கருணாரத்னே, மார்க்ரம் ஆகியோர் உள்ளனர்.

கம்மின்ஸ் அசத்தல்

கம்மின்ஸ் அசத்தல்

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸி. பவுலர் கம்மின்ஸ் ஆஷஸ் 4வது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால், 914 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 2001ம் ஆண்டு முன்னாள் ஆஸ்திரேலிய பவுலர் மெக்ராத் எடுத்த புள்ளிகளுக்கு இணையாக கம்மின்ஸ் எடுத்துள்ளார்.

3வது இடம் பும்ரா

3வது இடம் பும்ரா

2வது இடத்தில் ரபாடாவும், 3வது இடத்தில் 835 புள்ளிகளுடன் ஜஸ்பிரித் பும்ராவும் உள்ளனர். ஆஸி.யின் ஜோஸ் ஹேடல்வுடன் 12வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் 6 இடங்கள் முன்னேறி 60வது இடத்தில் உள்ளார்.

63வது இடத்துக்கு முன்னேற்றம்

63வது இடத்துக்கு முன்னேற்றம்

வங்கதேசத்துக்கு எதிராக அஸ்கர் ஆப்கன் 2 அரை சதங்கள் அடித்ததால் தர வரிசையில் 110-வது இடத்தில் இருந்து 63-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். சதம் அடித்த ரஹமத் ஷா 93வது இடத்தில் இருந்து 65வது இடத்துக்கு தாவி இருக்கிறார்.

37வது இடம்

37வது இடம்

கேப்டன் ரஷித் கான் இரு இன்னிங்சிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, அவர் தரவரிசையில் 69வது இடத்தில் இருந்து 37வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். முகமது நபி 85-வது இடத்தில் உள்ளார்.

Story first published: Tuesday, September 10, 2019, 18:52 [IST]
Other articles published on Sep 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+