For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup 2019:இவங்க 24 பேர் தான் எல்லாம் சொல்வாங்க.. வர்ணனையாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஐசிசி

துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளர்கள் யார்? யார் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஐசிசி.

வரும் 30ம் தேதி தொடங்க இருக்கும் உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் வர்ணனையாளர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. பட்டியலில் வர்ணனையில் சிறந்து விளங்கும் இந்தியரான ஹர்ஷா போக்லேயுடன், சவுரவ் கங்குலி மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் போன்ற முன்னாள் இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Icc releases the list of commentators for world cup 2019

2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், முதல் முறையாக உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்படுகிறார். அதேபோல, 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 4 சதங்களை குவித்த இலங்கையின் சங்ககாராவும், வர்ணனையாளராக இணைந்திருக்கிறார்.

முன்னாள் ஜாம்பவான்களான சவுரவ் கங்குலி, கிரீம் ஸ்மித்,வாசிம் அக்ரம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 24 வர்ணனையாளர்கள் பட்டியல் விவரம் இதோ:

நாசர் உசைன், இயான் பிஷப், சவுரவ் கங்குலி, ஜோன்ஸ், சங்ககரா, மைக்கேல் ஆதர்டன், அலிசன், பிரண்டன் மெக்கலம், கிரீம் ஸ்மித், வாசிம் அக்ரம், ஷான் பொல்லாக், மைக்கேல் ஸ்லாட்டர், மார்க் நிகோலஸ், மைக்கேல் ஹோல்டிங், ஈஷா குஹா, பொம்மி, சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்லே, சைமன், இயான் ஸ்மித், ரமீஸ் ராசா, அத்தர் அலி கான் மற்றும் இயான்வார்டு.

Story first published: Friday, May 17, 2019, 16:25 [IST]
Other articles published on May 17, 2019
English summary
Icc releases the list of commentators for world cup 2019.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+