Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க தான் அவங்க... செமிபைனலில் அவுட் கொடுக்க போறாங்க..! லிஸ்ட்டை வெளியிட்ட ஐசிசி

லண்டன்: அரையிறுதி போட்டிகளுக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது.

உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறி உள்ளன. முதல் அரை யிறுதி போட்டியில் இந்தியா,நியூசிலாந்து அணிகள் வரும் 9ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.

Icc releases the list of umpires for semi final matches

2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஜூலை 11ம் தேதி மோதுகின்றன. இந்தியா, நியூசிலாந்து மோதும் முதல் அரையிறுதிப் போட்டிக்கு நடுவர்களாக இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்க்வோர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டல்பரோ நியமிக்கப்பட்டுள்ளனர்.

3வது நடுவராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராட் டக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. போட்டி நடுவராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் பூன் செயல்படுவார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் 2வது அரையிறுதி போட்டியில் இலங்கையின் தர்மசேனா மற்றும் தென்ஆப்ரிக்காவை சேர்ந்த மார்ஷ் ஈராஸ்மஸ் நடுவர்களாக செயல்படுவர்கள். 3வது நடுவராக நியூசிலாந்தின் கிறிஸ் கேப்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டி நடுவராக இலங்கையை சேர்ந்த ரஞ்சன் மதுகல செயல்படுவார். பாகிஸ்தானின் அலீம் தார் 4வது நடுவராக செயல்படுவார் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

Story first published: Monday, July 8, 2019, 14:08 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+