எத்தனை தடவ சொல்றது.. பர்மிஷன் கொடுத்துட்டோம்.. தொப்பி விவகாரத்தில் பாக்.கின் தலையில் கொட்டிய ஐசிசி
துபாய்:இந்திய கிரிக்கெட் அணி அனுமதி பெற்றே ராணுவதொப்பியை அணிந்தது என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினார்கள். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்திய வீரர்கள் தொப்பியை அணிந்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து கிரிக்கெட் விளையாடியதை பாகிஸ்தான் அமைச்சர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் வலியுறுத்தினர்.

ஐசிசி அனுமதி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், இது குறித்து ஐசிசிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தது. இதனிடையே, ராணுவ தொப்பி அணிந்து விளையாட இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது.

செய்தி அறிக்கை
இதுதொடர்பாக ஐசிசி பொது மேலாளர் கிளேர் பர்லாங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி தருமாறு ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.

கோரிக்கை ஏற்பு
இதை விசாரித்த ஐசிசி, இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடலாம் என்று அனுமதி அளித்துள்ளது. பிசிசிஐ விடுத்துள்ள கோரிக்கையை ஐசிசி ஏற்கிறது.

நலநிதி முயற்சி
அதன் படி இறந்த ராணுவ வீரர்கள் நினைவாக ராணுவ தொப்பியை இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடலாம். நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதி என்பதால் ஐசிசி அனுமதி அளித்திருந்ததாக கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications