இந்திய அணியிடம் இருப்பது அசல் உலகக் கோப்பை தான்: ஐசிசி
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியிடம் இருப்பது அசல் ஐசிசி உலகக் கோப்பை தானே தவிர அதன் நகல் அல்ல என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
சுங்க வரி கட்டாததால் மும்பை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறையினர் உலகக் கோப்பையை பறிமுதல் செய்துவிட்டனர் என்றும், தற்போது இந்திய அணியின் கையில் இருப்பது நகல் என்றும் இன்று செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியைப் பார்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் ஐசிசி, பிசிசிஐ மீது அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கையில் இருப்பது அசல் ஐசிசி உலகக் கோப்பையைத் தவிர நகல் இல்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
