
மழை பாதிப்பு
லீக் சுற்றில், மழை பெய்ததால், பல்வேறு அணிகளுக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியது. மழை காரணமாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் புள்ளிகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மழை காலத்தில் போட்டியை நடத்தியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், மழை காரணமாக அரையிறுதி சுற்று பாதிக்கப்பட்டால் எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாற்று ஏற்பாடு
முன்பு எல்லாம் எந்த அணி புள்ளி பட்டியலில் அதிக இடம் பிடித்ததோ, அந்த அணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இது சரியான நடைமுறை கிடையாது என்பதால், ஐசிசி ஒரு சிறப்பான செயலை செய்துள்ளது. இதன் மூலம் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், ஆட்டத்தை கைவிடாமல் மீண்டும் மாற்று தேதியில் போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

ரிசர்வ் டே
முதல் நாள் ஆட்டம் நடைபெற்ற போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டால், மாற்று தேதியில், நடைபெறும் ஆட்டம் அதே தருணத்தில் தான் மீண்டும் தொடங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மேலும், டக் வொர்த் லூயிஸ் படீ வெற்றியை தீர்மானிக்க வேண்டும் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 5 ஓவர்களையாவது பிடிக்க வேண்டும்.

விதியில் மாற்றம்
இதனால் இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வி வாய்ப்பு இருப்பதால், இரு இன்னங்சிலும் 10 ஓவர் வீசப்பட்டு இருந்தால் மட்டுமே ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டாலும் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி அமல்படுத்தப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இல்லையேனில் போட்டி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கும்.


Click it and Unblock the Notifications











